யாரு கிட்ட டான்ஸ் ஸ்டெப்பு. மகனின் டாக்ஸி பாடலுக்கு நடனமாடிய பாக்கியராஜ்.

0
6609
bhagyaraj

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா ஆகியோரின் மகன் தான் சாந்தனு. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக கலக்கி கொண்டு இருக்கிறார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’ படத்தில் கல்லூரி மகனாக நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் சாந்தனு மற்றும் அவரின் தந்தை பாக்யராஜும் நடனமாடிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். நடிகர் சாந்தனு ஒரு சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தன் தந்தையை போல் இல்லாமல் நடனத்தில் பட்டைய கிளப்புவார். மேலும், நடிகர் பாக்கியராஜின் நடனமும் அனைவருக்கும் தெரிந்ததே. பாக்யராஜ் நடனத்தை அனைவரும் உடற்பயிற்சி என்று தான் விமர்சிப்பார்கள்.

- Advertisement -

நடிகர் பாக்யராஜின் நடனம் குறித்து இன்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சாந்தனு அவர்கள் தான் நடித்த படத்தின் மிகப் பிரபலமான பாடல் ஆன ‘டாக்ஸி டாக்ஸி ‘என்ற பாடலுக்கு தன் தந்தைக்கு நடனம் சொல்லித் தந்திருக்கிறார். இயல்பாக அதை எடுத்துக்கொண்டு தன் மகனுடன் சேர்ந்து நடனம் ஆடுகிறார் பாக்யராஜ்.

தந்தை, மகன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல வருடங்களுக்கு பிறகு பாக்கியராஜின் நடனம் பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் நடிகர் சாந்தனு நடித்த குறும்படம் சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
Advertisement