ஜெயலலிதாவுக்கு நடந்த அதே சம்பவம் பாக்யராஜுக்கும் நடந்தது – எப்போது ? அப்படி என்ன நடந்துள்ளது பாருங்க.

0
558
baagyaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படம் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை படங்களை எடுப்பதில் பாக்கியராஜ் கைதேர்ந்தவர். இதை தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். இறுதியாக தன் மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் படத்தை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று பாக்கியராஜ் உடைய பிறந்தநாள். மேலும், பாக்கியராஜ் நடத்தி வந்த பாக்கியா எனும் இதழை சில ஆண்டுகளுக்கு முன் கவனித்து வந்தவர் தஞ்சை ரவிராஜ். இவரிடம் பாக்கியராஜ் குறித்து சில விஷயங்களை பிரபல சேனல் பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் கூறியிருப்பது, சில வருடங்களுக்கு முன்பு பாக்கியா இதழை நடத்துவதற்கு பொறுப்பான ஒரு ஆசிரியை தேடிட்டு இருந்தார் பாக்யராஜ்.

- Advertisement -

பாக்யராஜ் சார் சந்தித்த முதல் நாள்:

அப்போது தான் நான் பாக்கியராஜ் சாரை சந்தித்து பேசினேன். நான் இதற்கு முன்னாடி ஜெயலலிதா அம்மாவிடம் செகரட்டரி ஆக வேலை பார்த்து இருந்தேன். அதனால் அவர்களைப் பற்றி சூடான ஒரு தொடர் எழுதுங்கள் என்று பாக்யராஜ் சார் சொன்னார். அப்போது தான் நான் அம்மு, அம்மா, அப்பல்லோ என்ற தொடர்களை எழுதினேன். அந்த இதழ்கள் 20 வாரங்களுக்கு மேல் வெளியாகி இருந்தது. பாக்யராஜ் சார் என்னிடம் நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறார்.

Surendhar MK on Twitter: "#Bhagyaraj was an ardent devotee of #MGR, who  presided over his marriage wit Poornima. Now, #Vijay for @imKBRshanthnu  http://t.co/2W5U4Q8Dje" / Twitter

ஜெயலலிதா அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானம்:

நான் ஜெயலலிதா மேடம் இடம் உதவியாளராக இருந்த சமயத்தில் தான் எம்ஜிஆர் மறைந்தார். அப்போது அவருடைய உடல் ஏற்றி இருந்த வண்டியில் ஜெயலலிதா மேடம் ஏற முயன்றபோது அவரை கீழே தள்ளி விட்டார்கள். நான் அவர் பக்கத்தில் இருந்து பார்த்தேன். அன்றைக்கு ஜெயலலிதா அம்மாவுக்கு நிகழ்ந்த மாதிரியே ஒரு நிகழ்வு பாக்யராஜ் சாருக்கும் நிகழ்ந்திருக்கிறது. ஜெயலலிதா அம்மா எம்ஜிஆரின் அரசியல் வாரிசு வளர்ந்தார்கள். அன்றைக்கு அதனால் அவர் அவமானப்படுத்தப்பட்டார்.

-விளம்பரம்-

பாக்யராஜுக்கு ஏற்பட்ட அவமானம்:

அதேபோல் திரை உலக வாரிசாக பாக்கியராஜ் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே பல கஷ்டங்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க சென்னையிலிருந்து பாக்யராஜ் அமெரிக்கா போய் இருந்தார். ஆனால், அங்கு மருத்துவமனையில் இருந்த சிலர் எம்ஜிஆர் பார்ப்பதற்கு பாக்யராஜை அனுமதிக்கவே இல்லை. இதனால் மனம் நொந்து போய் தான் பாக்கியராஜ் சார் ஹோட்டலுக்கு வந்தார். அவர் வந்த உடனே உங்களை பார்ப்பதற்கு எம்ஜிஆர் சார் தரப்பில் இருந்து போன் வந்திருந்தது என்று சொன்னவுடனே பாக்யராஜ் சார் அடித்துப் பிடித்துக்கொண்டு போயிருந்தார்.

Birthday Special:Dr.Rajkumar Unseen & Rare Photos - FilmiBeat

பிறந்தநாள் வாழ்த்து:

பாக்யராஜ் அவமானப்படுத்தியது அறிந்த உடனேயே அவரை கூப்பிட்டுப் பேசியிருந்தார் எம்.ஜி.ஆர். மேலும், பாக்யராஜ் சார் சினிமாவில் பல சாதனைகள் செய்திருக்கிறார். இது இன்றைய தலைமுறைக்கு பல பேருக்கு தெரியாது. அது மட்டும் இல்லாமல் அவர் இயக்குனராக இருந்தபோது அவர் நினைத்த காட்சி வரவில்லை என்றால் விடமாட்டார். அதற்காக பல கஷ்டப்பட்டாவது எடுப்பார். அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட இயக்குனர் பாக்கியராஜ் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். சோசியல் மீடியாவில் ரசிகர்களும், பல பிரபலங்களும் பாக்கியராஜ்ஜூக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றார்கள்.

Advertisement