பாக்யராஜ் சிஷ்யன் காஜா ஷரிப்பை நியாபகம் இருக்குதா? இப்போ என்ன பண்ணுறாருன்னு பாருங்க

0
4778
sheriff
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 80களின் காலகட்டத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருக்கிறார்கள். பின் காலப்போக்கில் அந்த நடிகர்கள் என்ன ஆனார்கள்? என்றே தெரியவில்லை. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர் காஜா ஷெரிப். இவரை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

-விளம்பரம்-
நடிகர் காஜா ஷெரிப்பின் தற்போதைய நிலை - Tamil Behind Talkies

இவர் 1980களில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து 2001 ஆண்டு வரை பல படங்களில் நடித்திரு காஜா ஷெரிப். அப்போது இவர் தான் மிக பிஸியான நடிகர் என்றே சொல்லலாம்.

- Advertisement -

காஜா ஷெரிப் நடித்த படங்கள்:

அதிலும் தமிழ் சினிமா உலகில் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் நடிப்பில் அந்த 7நாட்கள் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் காஜா ஷெரிப். அந்த படத்தில் பாக்யராஜ் சிஷ்யனாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவருக்கு தமிழ் சினிமா உலகில் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. அந்த படத்திற்கு பின் இவர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் காஜா ஷெரிப்பின் தற்போதைய நிலை - Tamil Behind Talkies

காஜா ஷெரிப் குறித்து பாலசந்தர் சொன்னது:

அவருடன் சேர்ந்து நடித்த காட்சிகள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றிருந்தது. அதற்குப் பின்னே இவர் மிகப் பிரபலமான நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருந்தார். இதனால் தமிழ் சினிமா உலகில் என்றுமே இயக்கத்தின் இமயமாக இருந்த கே பாலச்சந்தர் கூட இவரை அடுத்த கமலஹாசன் ஆக வரலாம் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

காஜா ஷெரிப் தற்போதைய நிலை:

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவரால் அதிகமாக சினிமாவில் நிலைக்க முடியவில்லை. பின் சில காலம் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்த நிலையில் காஜா ஷெரிப் குறித்த தகவல்கள் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதாவது, இவர் சினிமாவில் இருந்து விலகி மலேசியா, துபாய், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

வைரலாகும் காஜா ஷெரிப் வீடியோ:

அதில் பல நடிகர், நடிகைகளை அழைத்து சென்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பணியை செய்து வருகிறார். தற்போது இவருடைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் இவர் தான் காஜா ஷெரிப்பா! என்ற வியந்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டும், வீடியோவை வைரலாக்கியும் வருகிறார்கள்.

Advertisement