தந்தையால் பரிபோன சூப்பர் ஹிட் பட வாய்ப்பு – சாந்தனு வாழ்க்கையில் இப்படி எல்லாம் விதி விளையாடி இருக்கு.

0
1476
shanthanu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இயக்குனர், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு. இவர் 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Director k Bhagyaraj - About | Facebook

தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். என்னதான் சூப்பர் ஹிட் இயக்குனர் பாக்கியராஜ் மகனாக இருந்தாலும் சாந்தனுவால் ஒரு முன்னணி நடிகராக முன்னேரே முடியவில்லை. அதே போல இதுவரை சாந்தனு நடித்த எந்த ஒரு படமும் இவருக்கு ஒரு பெயரை வாங்கி கொடுக்கவில்லை. ஆனால், சாந்தனு சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

- Advertisement -

ஆம், நடிகர் சாந்தனு, ஜெய் மற்றும் சசி குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சுப்ரமணிய புறம் படத்தையும், விமல் நடித்து சூப்பர் ஹிட் அடைந்த களவாணி படத்திலும் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பாக்யராஜ், தனது மகனுடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், சாந்தனு முதலில் சக்கரகட்டி படத்தில் கமிட்டாகி இருந்தார். அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க தயாரிப்பாளர் தாணு அனைத்து அறிவிப்புகளையும் அழித்துவிட்டார். அதன் பின்னர்தான் சுப்பிரமணியம் படத்திற்காக சசிகுமார் என் மகனை கேட்டார். ஆனால் சக்கரகட்டி படத்திற்கு முன்பாக அந்த படத்தை வெளியிடுவேன் என்று சசிகுமார் கூறினார். ஆனால், சசிகுமாருக்கு முன்பாகவே சாந்தனு சக்கரக்கட்டி படத்தில் கமிட்டாகி விட்டார்.

எனவே, அந்த படத்திற்கு முன்னால் இது வெளியானால் அது நியாயமாக இருக்காது என்பதால் சசிகுமாரை கொஞ்சம் காத்திருக்க சொன்னேன். ஆனால் சசிகுமார் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாது என்று கூறி காத்திருக்க முடியாது என்று சொன்னதால் நான் அந்தப் படத்தை நிராகரித்து விட்டேன். இதனால் பல விமர்சனங்களை நான் சந்தித்தேன். அதேபோல சர்குணம் என்னை சந்தித்து சாந்தனுவை ஹீரோவாக வைத்து களவாணி படத்தை இயக்க விரும்புவதாக கூறினார். ஒரு நாலைந்து நாட்கள் அந்த படத்தின் கதையைக் கூட கூறினார். ஆனால், திடீரென்று சர்குணம் காணாமல் போய்விட்டார்.

-விளம்பரம்-

சிறிது நாட்கள் கழித்து அந்த படத்தில் வேறு ஒரு ஹீரோ கமிட்டாகி இருப்பதாக அறிவிப்புகள் வெளியானதை பார்த்து நான் மிகவும் ஷாக் அடைந்தேன். பின்னர் வேறு ஒரு மூலமாக எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. சாந்தனு சம்பளம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் நினைத்ததால் புதுமுகத்தை போடலாம் என்று சொன்னாராம். இதுவும் சாந்தனுவுக்கு மிகவும் பேட் லக் என்று கூறிய பாக்கியராஜ் நேரம் நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும் நான் எப்போதும் அவனிடம் விக்ரமை ஒரு உதாரணமாக பார்க்கச் செல்வேன். ஆரம்பத்தில் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்ற நீண்ட நாட்கள் கழித்து தான் அவருக்கு ஒரு பிரேக் கிடைத்தது என்று கூறியுள்ளார் பாக்கியராஜ்.

Advertisement