பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய அகிலன் – அவருக்கு பதில் இனி இவர் தான்.

0
21411
Akilan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-119.jpg

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் பாருங்க : மணமக்களுக்கு பெட்ரோலை பரிசளித்த மயிலசாமி – 3 ரூபாய் விலை குறைப்பு குறித்து என்ன சொல்லியுள்ளார் பாருங்க

- Advertisement -

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்த பரீனா கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். அவர் கர்ப்பமாக இருப்பதால் அவர் சீரியலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துள்ளார்.இந்த நிலையில் சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் உடன் நடிக்கும் அகீலனை டாக் செய்து இனி இதுபோன்ற எடிட்டை மிஸ் செய்வோம் என பதிவு செய்து இருந்தார்.

அவர் போட்ட இந்த பதிவால் ஸ்வீட்டி அல்லது அகிலன் யாரோ சீரியலில் இருந்து வெளியேற போகிறார் என்று எதிர் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து அகிலன் வெளியேறி இருக்கிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த சீரியலின் புகைப்படத்தில் அகிலனுக்கு பதிலாக புதிததாக வேறு ஒரு நடிகர் இருப்பதை நீங்கள் புகைப்படத்தில் காணலாம்.

-விளம்பரம்-
Advertisement