இந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பிரபலங்கள் சைக்கிளுடன் ஃபோட்டோ போடுவது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முதன் முறையாக இந்தியாவில் பெட்ரோல் 102 ரூபாயை கடந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பெட்ரோல் விலை வியர்வை கண்டித்து பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 தாண்டி இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக தமிழகத்தில் தான் 3 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. இருப்பினும் இந்த விலை குறைப்பு போதாது என்பதே சாமானிய மக்களின் கருத்து. பெட்ரோல் விலை ஏற்றத்தை கிண்டல் செய்யும் விதமாக பல பிரபலங்கள் பல செயல்களை செய்து வருகின்றனர்.
இதையும் பாருங்க : விருது விழாக்கு வரும் நயன் ப்ரோமோஷனுக்கு ஏன் வருவதில்லை – அவரே சொன்ன நச் பதில் (அதான் லேடி சூப்பர் ஸ்டார்)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பிரபல நடிகை சன்னி லியோன், பெட்ரோல் விலை உயர்ந்ததால் இனி சைக்கிள் தான் சிறந்தது என்று சூசகமாக புகைப்படம் ஒன்றை போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தமிழில் பிரபல காமெடியனான மயில்சாமி, மண மக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கியுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் மயில்சாமி திருமண விழாவில் கலந்துகொண்ட போது மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய மயில்சாமி, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.