கண்ணம்மாவின்(ரோஷினி) ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா – இது போதாமையா சினிமால நடிக்க போய்ட்டாங்க ?

0
218
barathi
- Advertisement -

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகுக்கும் தொடர்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரேட்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா திகழ்ந்து வருகிறது. மேலும், இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண்பிரசாத் நடித்து வருகிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடித்து வருகிறார். நடிகை ரோஷினி அவர்கள் பிரபலமான மாடல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்.

-விளம்பரம்-

அதோடு இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் போடும் போட்டோக்கள், வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், சோசியல் மீடியா மூலம் தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். பின்னர் ரோஷினி தன்னுடைய நடிப்பு மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு கதவைத் தட்டி இருக்கிறது. இதற்கு ரோஷினி அவர்கள் ஓகே சொல்லிவிட்டதாகவும், சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் தகவல்கள் வந்திருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளார்கள்.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே இந்த சீரியல் இருந்து அகில் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சினிமாவில் வாய்ப்பு வந்ததால் சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பரினா நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருப்பதால் டெலிவரி முடியும் வரை அவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதே போல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் சீரியலில் கண்ணம்மா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தாராம். கடந்த சில மாதங்களாகவே இவருடைய கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் இருப்பதால் 20,000 சம்பளம் பெற்று வந்துள்ளார். மேலும், பாரதி கதாபாத்திரத்திற்கு 20,000 , சௌந்தர்யா கதாபாத்திரத்திற்கு 15000, அஞ்சலிக்கு 9000, வெண்பாவுக்கு 10000 என்று பாரதிகண்ணம்மா சீரியல் நடிக்கும் நடிகர்களின் சம்பளப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், சீரியலில் இருந்து சில நடிகர்கள் மாற இருப்பதால் டிஆர்பி ரேட்டிங்க் அப்படியே இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

-விளம்பரம்-
Advertisement