கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா. எத்தன மாசம் தெரியுமா ?

0
11543
venba

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர். இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் பாருங்க : ‘கால் விரலுக்கு சமம்’ ஏ ஆர் ரஹ்மானையும் அவர் வென்ற ஆக்ஸரை இழுவிபடுத்தி பேசியுள்ள பாலகிருஷ்ணா. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.

- Advertisement -

இதற்கெல்லாம் மேலே சென்று சமீபத்தில் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல். இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாகி இருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இன்னும் மூன்று மாதத்தில் குழந்தை பிறந்துவிடும் 4 வருட கனவு என்று பதிவிட்டுள்ளார் பரீனா.

-விளம்பரம்-
Advertisement