‘கால் விரலுக்கு சமம்’ ஏ ஆர் ரஹ்மானையும் அவர் வென்ற ஆக்ஸரை இழுவிபடுத்தி பேசியுள்ள பாலகிருஷ்ணா. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.

0
7156
bala
- Advertisement -

இந்திய சினிமாவில் ஆஸ்கர் நாயகன் என்று போற்றப்படும் இசைப்புயல் ஏ ஆர் ரஹுமானை பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணன் இழிவுபடுத்தி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் இசைப்புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் காலமாகி இருக்கிறார். ” இசைப்புயல், மொசார்ட் ஆஃப் மெட்ராஸ்” என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் இசையாமைத்து இருக்கிறார். அதே போல இரண்டு ஆக்ஸர் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மானையும் அவர் வாங்கிய ஆஸ்கார் விருதை பற்றியும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இழிவாக பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் பாலாகிருஷ்ணா எனப்படும் பாலய்யா. இவரது படங்களில் எல்லாமலே படு மாஸான காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.

இதையும் பாருங்க : கண்ணான கண்ணே சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் நடிகையா இப்படி ஒரு கிளாமர் உடையில்.

- Advertisement -

அது தெலுங்கு ரசிகர்களுக்கு வேண்டுமானால் மாஸாக இருக்கலாம், தமிழ் ரசிகர்களுக்கு இவரது நடனமும் ஆக்ஷனும் என்றுமே தமாஷ் தான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலகிருஷ்ணா, ஏ.ஆர். ரகுமான் பற்றிய கேள்விக்கு ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம்.

எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது, என்றும் பாலகிருஷ்ணா அந்த பேட்டியில் பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. இரண்டு ஆஸ்கர் வென்ற ஒரு கலைஞரை தெலுங்கில் பாலகிருஷ்ணா போன்ற பெரிய நடிகர்கள் இப்படி தரம் தாழ்த்தி பேசலாமா என்று பல்வேரு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement