பாம்பே மாடலிங் இருந்தால் நல்ல இருக்கும், இவங்க எல்லாம் வேணாம்-னு சொல்லிட்டாங்க. பாரதி கண்ணம்மா நடிகை.

0
6957
Bharathi-Kannamma

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியல்களுமே தூள் கிளப்புகிறது. அதிலும் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி ஒளிபரப்பான “பாரதி கண்ணம்மா” சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் காதல், பாசம், குடும்பம் என எல்லாம் கலந்த கலவை தொடராக உள்ளது. இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் தழுவல். மேலும், இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழில் இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஷினி அவர்கள் சோசியல் மீடியாவில் நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் தொகுப்பாளர் கண்ணம்மா ரோஷினி இடம் மீடியா ஃபீல்டுல நீங்க உங்களுடைய கலரினால் பிரச்சினையை ஏதாவது சந்தித்து உள்ளீர்களா? இருந்தால் அதை பண்ணி சொல்லுங்கள் என்று கேட்டு உள்ளார்.

இதையும் பாருங்க : மைனா பட நடிகர் முதன் முதலில் அறிமுகமானது மாதவன் அறிமுகமான இந்த படத்தில் தான். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

அதற்கு ரோஷினி கூறியது, அந்த மாதிரி நேரடியாக எந்த பிரச்சனையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், நான் சின்ன வயதிலிருந்து என்னுடைய வாழ்க்கையில் இந்த நிறத்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறேன். இப்போது வரைக்குமே நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால், தற்போது இந்த மாதிரி நிறப்பிரச்சனைகள் ஒழிந்து கொண்டு வருகிறது. இதற்கு முன்னாடி எனக்கு மாடலிங் பண்ண நிறைய வாய்ப்புகள் வரும். அது எல்லாமே என்னுடைய கலர் மூலம் தான்.

Top Ten Bharathi Kannamma Actress

மற்றவர்களிடம் இருந்து என்னை தனியாக உருவாக்கியதே என்னுடைய நிறம் தான். ரோஷினினா இவங்க தான் என்று எனக்கு அடையாளத்தை தந்ததே எனக்கு இந்த நிறம் தான். நிறைய விஷயங்களில் என்னுடைய நிறம் எனக்கு பிளஸ் ஆக அமைந்து உள்ளது. பெருசா எனக்கு என்னுடைய நிறம் நெகட்டிவாக இருந்ததில்லை. ஒரு முறை விளம்பரங்கள் நடிக்க சொன்ன போது அங்கு உள்ளவர்கள் பாம்பே மாடலிங் இருந்தால் நல்ல இருக்கும், இவங்க எல்லாம் வேணாம் என்று சொல்லுவாங்க. அந்த மாதிரி தான் எனக்கு நடந்திருக்கிறது என்று கூறினார்.

இதையும் பாருங்க : நானும் இப்படி இருந்தவள் தான். பழைய கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்த காயத்ரி.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து தொகுப்பாளர் என்ன தான் தற்போது நிறத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் பல பேர் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ரோஷினி அவர்கள் கூறியது, எனக்குள்ளே என்னுடைய நிறம் குறித்து பயங்கரமான காம்ப்ளக்ஸ் தான். என்னுடைய நிறத்தால் நான் முதலில் எல்லாம் பயங்கர கஷ்டப்பட்டு இருக்கிறேன். எல்லா விதத்திலும் நான் தனித்து தெரிவேன்.

என்னுடைய நிறத்தால் மற்றவர்களுக்கு என்னை பிடிக்காமல் இருக்குமோ? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ? என்ற பல பயம் என்னுள் இருக்கிறது. இப்பகூட எனக்குள் இருக்கிறது. ஆனால், யாரும் நீங்களே உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள். உங்களை தாழ்த்துவதற்கு உங்களை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் யாரும் உங்களைத் தாழ்த்தி கொள்ளாதீர்கள். முதல் உங்களை நீங்கள் லவ் பண்ணுங்க. மனதார நீங்கள் தான் அழகு என்று கூறினார்.

நடிகை ரோஷினிக்கு பாரதி கண்ணம்மாவில் வாய்ப்பை தேடி தந்தது ‘‘ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி’’ என்ற குறும்படம் தான். பிரபல காமெடி நடிகை ஆர்த்தி இயக்கிய குறும்படம் தான் ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி. இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை ரோஷினி. தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அனைத்து இல்லதரிசிகள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார். முதலில் இவர் விளம்பரங்களில் தான் நடித்து வந்தார்.

Advertisement