பாரதி கண்ணம்மாவில் இருந்து விலகினரா இல்லை விலக்கப்பட்டாரா – முதன் முறையாக அகிலன் சொன்ன உண்மை.

0
3860
Akilan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடிக்கும் நடிகை ஸ்வீட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் உடன் நடிக்கும் அகீலனை டாக் செய்து இனி இதுபோன்ற எடிட்டை மிஸ் செய்வோம் என பதிவு செய்து இருந்தார்.அவர் போட்ட இந்த பதிவால் ஸ்வீட்டி அல்லது அகிலன் யாரோ சீரியலில் இருந்து வெளியேற போகிறார் என்று எதிர் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் இருந்து அகிலன் வெளியேறி இருக்கிறார்.

இதையும் பாருங்க : சித்தாள் வேலை, படிப்புக்கு அம்மா தாலி அடமானம், 500 ரூபாய் சம்பளம் – ‘வலிமை’ வரை கலக்கும் கிராமத்து பெண்.

- Advertisement -

அகிலன் சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டாரா, இல்லை வெளியேறினாரா என்பதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இப்படி ஓரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அகிலன், இதற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில், சீரியலில் இருந்து தானே தான் வெளியேறியதாக கூறி இருக்கிறார்.அதற்கு காரணம் தற்போது அவர் சினிமாவில் நடித்து வருகிறாராம்.

Image

ஏற்கனவே, அகிலன் நடிகர் பிரபுதேவாவின் படம் ஒன்றில் நடித்து உள்ளாராம். அது போக விஷால் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடித்து உள்ளாராம். மேலும், பிசா 3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இது போக இன்னும் சில பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பில் கமிட் ஆகியிருப்பதாகவும் விரைவில் அதை பற்றி அறிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். எனவே, விரைவில் இவரை வெள்ளித்திரையில் காணலாம்.

-விளம்பரம்-
Advertisement