சித்தாள் வேலை, படிப்புக்கு அம்மா தாலி அடமானம், 500 ரூபாய் சம்பளம் – ‘வலிமை’ வரை கலக்கும் கிராமத்து பெண்.

0
2889
saranya
- Advertisement -

கருப்பாக இருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்ற பலரின் எண்ணங்களை தகிர்த்து தெரிந்தவர் சரண்யா ரவிச்சந்திரன். தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். நடிப்புக்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர்.தற்போது வலிமை படம் வரை வளர்ந்து இருக்கும் இவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை திருச்சிக்கு அருகே இருக்கும் கே கள்ளிக்குடி என்கிற கிராமத்தை சேர்ந்த பக்கா கிராமத்து பெண் சரண்யா இவரது தந்தை ஒரு விவசாயி அம்மா சித்தாள் வேலை செய்பவர்.

-விளம்பரம்-
உருக்குலைக்கும் உருவகேலி... ‘வலிமை’காட்டும் சரண்யா

இவருக்கு 2 தம்பி இருக்கிறார்கள் இவர்களையெல்லாம் படிக்கவைக்க இவரது தாய் தந்தையர் மிகவும் கஷ்டப்பட்டார்களாம். அம்மாவின் தாலியை அடமானம் வைத்து தான் கல்லூரி படிக்கும்போது பீஸ் கட்டினாராம் சரண்யா.

இதையும் பாருங்க : இவர் சம்மதிச்சதுக்கு அப்புறம் தான் கல்யாணமே பண்ணேன் – ஆனந்த கண்ணன் குறித்து உருக்கமான பதிவை போட்ட ரம்யா.

- Advertisement -

படிப்பிற்காக வாங்கிய கடன் தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என்ற கடமை ஆகியவற்றால் படித்து முடித்த உடனேயே வேலை தேட ஆரம்பித்திருக்கிறார். திருச்சியில் இருந்து வேலைக்காக சென்னைக்கு வந்த இவர் தெருத்தெருவாக அலைந்து பொருட்களை விற்கும் வேலைதான் செய்திருக்கிறார். ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனியில் சேர்ந்தால் ஒரு 500 ரூபாய் அதிகமாக கிடைக்கும் என்பதாலேயே அடிக்கடி கம்பெனி மாறுவாராம்.

This image has an empty alt attribute; its file name is 1-107.jpg

பூ, மூக்குத்தி, செருப்பு, டிரஸ்னு என் கிராமத்து தோற்றத்தைப் பார்த்துட்டு பலரும் இவரை கிண்டல் செய்து உள்ளார்களாம். இவரது பேச்சுத் திறமையைக் கண்டு இவரது நண்பர்கள் சிலர் இவரை ‘வீ ஜே’ வாக முயற்சி செய்ய சொல்லி இருக்கிறார்கள் இதனால் இவரும் பல்வேறு நேர்காணலுக்கு சென்று உள்ளார். இவர் சென்ற இடத்தில் மூஞ்சில பல்லு மட்டும்தான் தெரியுது. நீயெல்லாம் வி.ஜேவா என்று இவரை கேலியும் செய்து உள்ளார்களாம்.

-விளம்பரம்-
Saranya Ravichandran (Actress) Wiki, Age, Biography, Movies, short film

அதை எல்லாம் கடந்து வந்து பின்னர் இவர் சினிமாவில் நடிக்க முடிவு செய்து கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம்களில் நடித்த இவருக்கு பின்னர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி என பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் தற்போது அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisement