அன்று கபாலிக்கு வில்லன், இன்று கண்ணம்மாவிற்கு வில்லன் – சீரியலில் நடிக்க ஒப்புகொண்ட காரணம் சொன்ன லிங்கேஷ்.

0
628
Lingesh
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார்.

-விளம்பரம்-

பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி, பாரதியின் தம்பி அகிலன் ஆகியோர் விலகி இருந்தார்கள். இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது சீரியலில் அந்த மருத்துவமனையை தீவிரவாதி கும்பல் ஹைஜாக் செய்கிறது. தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற போலீஸ் முயற்சி செய்கின்றனர். பாரதியை மனித வெடிகுண்டாக மாற்றி வைத்திருக்கிறார்கள். பின் கண்ணம்மா பாரதியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல்:

இறுதியில் பாரதி கண்ணம்மா காப்பாற்றப்படுவார்களா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் தீவிரவாதி கும்பலின் தலைவராக நடிப்பவர் நடிகர் லிங்கேஷ். இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல சேனல் இவரிடம் பேட்டி ஒன்று எடுத்து இருந்தது. அதில் அவர் கூறியிருந்தது, பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனர் பிரவீன் என்னோட பெஸ்ட் பிரண்ட். அவர் ராஜா ராணி ஆரம்பிக்கும் போது என்னை அந்த தொடரில் நடிக்க கேட்டார். ஆனால், நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். அடுத்து பாரதிகண்ணம்மா தொடரில் ஒரு ஸ்பெஷல் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த இருக்கிறேன். அதில் நீ நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

நடிகர் லிங்கேஷ் அளித்த பேட்டி:

அப்பவும் கோவிட் சூழலில் என்னால் பண்ண முடியவில்லை. அடுத்து இந்த கதாபாத்திரத்துக்காக மூன்றாவது முறையாக கேட்டார். ஏற்கனவே இரண்டு முறை வரவில்லை என்று சொல்லிவிட்டதால் இந்த முறையும் அப்படி சொல்ல முடியாது என்று அவருக்காக பண்ணலாம் என்று ஓகே சொன்னேன். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை பெஸ்ட்டாக பண்ணனும் என்பது மட்டும்தான் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. சினிமாவில் தான் சூப்பராக நடிக்கணும், சீரியலில் சாதாரணமாக கேஷுவலாக நடித்தால் போதும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. எதுவாக இருந்தாலும் என்னுடைய பெஸ்ட்டை கொடுக்கணும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதே மாதிரி நடித்துக் கொண்டு வருகிறேன்.

-விளம்பரம்-

சீரியல் அனுபவம்:

மேலும், சீரியலில் இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பிரவீன் போன் செய்து செம ரெஸ்பான்ஸ் டார்லிங் பயங்கர ஹாப்பி என்று சொன்னார். அவர் ஹேப்பியானது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது. அதேபோல் நான் சோசியல் மீடியாவில் ஒரு மீம்ஸ் பார்த்தேன். அதில் பீஸ்ட் பட வில்லன் போட்டோவையும், என் போட்டோவையும் போட்டு அந்த வில்லனை விட இந்த வில்லன் நல்லா இருக்காரு என்று எழுதி இருந்தார்கள். அது சந்தோஷமாக இருந்தது. பொதுவாக சினிமாவில் நடிப்பவர்கள் சீரியலில் நடிக்க தயங்குவார்கள். ஆனால், உண்மையில் அப்படி இல்லை.

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் படங்கள்:

சினிமாவையும், சீரியலையும் பேலன்ஸ் பண்ற பக்குவம் இருந்தால் போதும். சன்மியூசிக்கில் ஆங்கரிங் பண்ணும் போது எனக்கு சீரியலில் நல்ல வாய்ப்புகள் வந்தது. இப்ப வரைக்கும் ஆஃபர் வந்து கொண்டு தான் இருக்குது. ஆனால், சினிமா தான் என் கனவு. அதுக்காக தான் எல்லா வாய்ப்புகளையும் மறுத்தேன். கெஸ்ட் ரோல் பண்ணுவது வேற. பிரவீன் கேட்டதால் மட்டும் தான் இதை நான் பண்ணினேன். என்னோட கவனம் முழுக்க முழுக்க சினிமாவில் தான் இருக்கிறது. இப்போது மூன்று படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கிறேன். நாலாவது படத்தோட ஷீட் இப்போது போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

Advertisement