கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய போட்டு. ஆளே மாறியுள்ள பாவனா. மிரட்டலான லுக் இதோ.

0
70964
bhavana
- Advertisement -

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அதன் பின்னர் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், கூடல் நகர், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை பாவனா அவர்கள் பல மலையாள மொழி படங்களிலும், கன்னட மொழி படங்களிலும் நடித்து உள்ளார். கடந்த வருட துவக்கத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த பிரச்சனை காரணமாக பிரபல மலையாள நடிகர் திலீப் அவர்களை கைது செய்து பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த கேஸ் தற்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Image

அதன் பின்னர் தான் நடிகை பாவனா அவர்கள் தனது நீண்ட நாள் காதலன் நவீனை திருமணம் செய்து கொண்டார். நவீன் அவர்கள் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா அவர்கள் சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு இருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் ரிஎன்ட்ரி கொடுக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி– திரிஷா நடிப்பில் வெளியான படம் “96” . இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்கிறார்கள். இந்த படத்தில் நடிகை பாவனா அவர்கள் நடிக்கிறார். மேலும், 96 படம் தமிழில் மிகப் பெரிய அளவு வெற்றி கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த வருடம் தேசிய விருதில் பல பிரிவுகளில் இந்த 96 படம் விருதுகளை தட்டி சென்றது.

- Advertisement -

கன்னட மொழியில் திரிஷா வேடத்தில் நடிகை பாவனா நடிக்கிறார். இதில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் கணேஷ் நடிக்கிறார். இந்த படத்தை குப்பி இயக்குகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் பஜரங்கி படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது இந்த பஜரங்கி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை பாவனா நடித்து வருகிறார். இதில் கதாநாயகனாக சிவராஜ் குமார் நடிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் ஹர்ஷா ஆவார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Image result for bhajarangi 2

இதில் நடிகை பாவனா அவர்கள் கழுத்தில் தாயத்து, நெற்றியில் பெரிய போட்டு தலைமுடியை விரித்துப் போட்ட படி மிரட்டலான தோற்றத்தில் காட்சி அளித்து உள்ளார். இந்த தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பாவனாவை பாராட்டியும் உள்ளார்கள். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இது குறித்து இயக்குனர் கூறியது, நடிகை பாவனாவை இதுவரை பார்க்காத அளவுக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்த படத்தில் பார்க்கலாம். இது புதிரான கேரக்டர். இதற்கு மேல் அவர் கேரக்டர் பற்றி பேசினால், முழுக் கதையை சொன்னது போலாகிவிடும் என்றார். இதனால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement