சுறா, ஆழ்வாரை விட பூமி ஒரு மொக்க படம் – ரசிகரின் கருத்தால் கடுப்பான பூமி பட இயக்குனர்.

0
3767
- Advertisement -

இயக்குனர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் ‘பூமி’. இப்படம் கடந்த ஜனவரி 14-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இயக்குனர் லக்ஷ்மன் இந்த படத்திற்கு முன்னர் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் என்று இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படத்திலுமே ஜெயம்ரவி தான் கதாநாயகன் இந்த இரண்டு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால், பூமி திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்த படத்தில் 16 வயதினிலே தன் அறிவியல் அறிவை பயன்படுத்தி சாட்டிலைட் செய்யும் மாணவனாக வரும் ஜெயம் ரவி பின்னர் நாசா உதவியுடன் படிப்பை முடித்துவிட்டு அங்கேயே ஒரு விஞ்ஞானியாக வேலை செய்கிறார்.

-விளம்பரம்-

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருக்க அங்கே வாழ முடியும் என்பதற்கான ஆதாரங்களை பகிர்ந்து தான் ஒரு சிறந்த விஞ்ஞானி என்பதை நிரூபிக்கிறார் ஜெயம்ரவி. பின்னர் ஒரு மாத விடுமுறையில் தனது அம்மாவுடன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் துயரத்தை பார்த்து கொதிக்கும் ஜெயம்ரவி அங்கேயே விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொடுத்து விவசாய நிலங்களை பாழ்படுத்தும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக ஜெயம் ரவி குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார்.

- Advertisement -

பின்னர் அந்த கார்ப்பரேட் உரிமையாளருக்கும் ஜெயம் ரவிக்கும் ஏற்பட்ட மோதலை தாண்டி விஞ்ஞானியாக இருந்த ஜெயம் ரவி விவசாயத்திற்காக என்ன பாடு படுகிறார் ? என்ன தீர்வை கொடுக்கிறார் ? என்பதுதான் இந்த படத்தின் கதை. வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ட்விட்டர் என்று பல இடங்களில் பகிரப்படும் சில பல தகவல்களை ஒன்றுவிடாமல் தேடிப்பிடித்து அவற்றையெல்லாம் படத்தில் காட்சியாக வைத்து இருக்கிறார் படத்தின் இயக்குனரான லட்சுமன். அதுபோக யூடியூபில் பல ஆங்கில ஆராய்ச்சிகளை கூகுளில் படித்துவிட்டு அதனை அப்படியே தமிழாக்கம் செய்யும் பிரபல யூடியூபரான மதன் கௌரி இன்ஸ்பிரேஷன் படத்தில் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

இதனாலேயே இந்த படத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை பற்றிய பல்வேறு விதமான மீம்களும் ட்ரோல்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், ‘பூமி’ படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை நான் பார்த்த படங்களில் ‘பூமி’ போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. ‘சுறா’, ‘ஆழ்வார்’, ‘அஞ்சான்’, ‘ராஜபாட்டை’ வரிசையில் இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி” என்று தெரிவித்தார்.

-விளம்பரம்-

உடனடியாக அவரைப் பின்தொடர்பவர், “தற்போது இயக்குநர் லக்‌ஷ்மண் உங்களை பிளாக் செய்வார்” என்று தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குநர் லக்‌ஷ்மண் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:”சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்” இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

Advertisement