பட வாய்ப்பிற்காக இப்படி பேசுகிறீர்களா ? சுஷாந்த் மரணம் குறித்து பேசிய பூமிகாவிற்கு ரசிகர்கள் கேள்வி.

0
10964
bhoomika
- Advertisement -

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சுஷாந்த் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் தடம் பதித்தார். எம்.எஸ் தோனியின் வாழ்கை வரலாற்று படத்தில் ரீல் தோனியாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பிறகு பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், மருத்துவ ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது.

- Advertisement -

இவர் தற்கொலை குறித்து சோசியல் மீடியாவில் பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், சுஷாந்த் இறப்பிற்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியில் தான் காரணம் என்றும் சர்ச்சை எழுந்தது. நிலையில் பிரபல நடிகையான பூமிகா, சுஷாந்த் இறப்பிற்கு பாலிவுடை காரணம் செல்லாதீர்கள் என்று பதிவு ஒன்றை செய்திருந்தார். நடிகை பூமிகா, சுஷாந்த் நடித்த தோனி படத்தில் தோனியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.

பூமிகாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் சிலர் பூமிகாவை விமர்சித்து சாடி வருகின்றனர். அதில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு பட வாய்ப்பு வேண்டும் என்பதற்காக குற்றவாளிகளை காப்பாற்றும் நினைக்கிறீர்களா ? மும்பையில் புதிய தாவுத் (மிஸ்டர்.கான் ) மற்றும் சின்ன ராஜா (மிஸ்டர்.சோப்ரா) இருக்கிறார்கள். நீங்கள் மந்தாக்கினியாக மாற மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறி இருந்தார். அதற்கு பதிலளித்த பூமிகா அப்படியெல்லாம் இல்லை, அப்படி படவாய்ப்புகள் வேண்டுமென்றால் நான் இதனை எப்போதும் செய்து 100 படங்களில் நடித்து இருப்பேன் என்று பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement