விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி டிவியில் தொடங்கி ஒன்பதாம் வாரம் தொடங்கி 62 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று சிவகுமார் தான் வெளியேறி இருந்தார்.
மேலும், ஒன்பதாம் வாரத்தில் ஏஞ்சல்-டெவீல் சுற்று நடைபெற்றிருக்கிறது. எப்போதுமே இந்த டாஸ்க் வந்தாலே பிக் பாஸ் வீடே கலவர பூமியாக மாறி விடும். அந்த வகையில் இந்த வாரம் ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்கில் போட்டியாளர்கள் மத்தியில் சண்டை கலவரம் வெடித்து கொண்டிருக்கின்றது. டெவீல் அணியில் இருப்பவர்கள் ஏஞ்சல் அணியில் இருப்பவர்களை கெட்டவர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் டாஸ்க்.
ஏஞ்சல்- டெவீல் டாஸ்க்:
அதாவது, ஏஞ்சல்ஸ் அணியில் இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபமானாலோ, அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட்டை கழட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் டாஸ்க்கின் விதி. அதோடு இந்த டாஸ்கில் அதிகமான ஹார்ட் யார் வாங்குகிறார்களோ அவர் தான் நாமினேசன் ப்ரீ பாஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் என்று கூறப்பட்டது. இதனால் சிலர் கொஞ்சம் எல்லையை மீறி முட்டையை வாயில் ஊத்துவது, தலையில் உடைப்பது, முகத்தில் திணிப்பது, குப்பையை கொட்டுவது என்று மட்டமான வேலை எல்லாம் செய்திருக்கிறார்கள்.
#Raanav used a bad word on #Varshini …atha sona odana bayanthu odran parunga 🤣🤣🤣 #BiggBossTamil8 pic.twitter.com/NphHWQdV4D
— Raanav King of Content (@I_i_ilavarisirk) December 6, 2024
ராணவ் வீடியோ:
அதுமட்டுமில்லாமல் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் கலவரம், சண்டை, போட்டி எல்லாமே நடந்தது. இந்த டாஸ்கில் ரஞ்சித், பவித்ரா, தீபக், மந்திரி ஆகியோர் சிறந்தவர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் வர்ஷினி- ராணவ் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜாக்லின்- ராயன் இருவருமே ராணவ் இடம் பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது ராயன், வர்ஷினியை எதற்காக கெட்ட வார்த்தையில் பேசினீர்கள்? என்று கேட்க, ஜாக்லினும் வற்புறுத்தி கொண்டே இருந்தார்.
#Raanav ennoda kaadhu pada edhuvum thappa pesala – #Varshini
— Aadhavi (@classicparky) December 7, 2024
End card ah podunga.
andha pilla @varshinivenkat_ ah irukka vidungada plz
nimathiya saapida kooda vidurenga illayam !!#BiggBossTamil #BiggBossTamil8 pic.twitter.com/UuPBAtQ66F
வர்ஷினி வீடியோ:
அதற்கு ராணவ், நான் அப்படி பேசவில்லை என்று கோபம் வந்து ராயனை திட்டி அங்கிருந்து செல்கிறார். இதைதான் சோசியல் மீடியாவில் ராணவை ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வர்ஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், ராணவ் என்னை எந்த ஒரு கெட்ட வார்த்தையிலும் பேசவில்லை. எனக்கு தெரிந்தவரை என் காதில் அந்த மாதிரி எந்த வார்த்தையுமே விழவில்லை. இது ஒரு பிரச்சனை என்று பேசாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.