பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ஆறாவது நாளுக்கான முதல் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று ஆறாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான்.
பிக் பாஸ் சீசன் 8:
அதன் பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். பின் ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
அதற்குப்பின் டாஸ்கில் பெண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கு என்று பெண்கள் அணி, ஆண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கிறது என்று ஆண் தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதற்கிடையில் பவித்ரா விஷயத்தில், ரவீந்தர்- ரஞ்சித் பயங்கரமாக சண்டை போடிருந்தார்கள். கடைசியில் அதை பிராங்க் என்று முடித்ததால் பெண்கள் அணியினர் ரொம்பவே கடுப்பாகி விட்டார்கள். பின் நேற்று ஒவ்வொரு போட்டியாளர்களுமே நாமினேட் ஆனவர்களுடைய பெயர் சொல்லி இருந்தார்கள். அதில் அதிகம் ரஞ்சித்- சௌந்தர்யா- ரவீந்தர் பெயர் வந்திருக்கிறது.
நேற்று எபிசோட்:
பின் ரவீந்தர் செய்த பிராங்கை எல்லோரும் டார்க்கெட் செய்து பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார். அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. பின் சாச்சனா வெளியில் நடப்பதை பற்றியும், ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார். சாச்சனா என்ட்ரி வேற லெவலில் இருக்கிறது.
முதல் ப்ரோமோ:
இந்த நிலையில் இன்றைக்காக தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், விஜய் சேதுபதி, பிக் பாஸ் வீட்டுக்குள் கப்பை ஜெயிக்க போனவங்க பெட்டுகாக சண்டை போடுறாங்க. கொத்தமல்லி தரையா, தண்ணி, பச்சை மிளகாய், நூடுல்ஸ் தரையா என்று மாத்தி மாத்தி பேசி இருக்காங்க. இவங்க விளையாட போனாங்களா இல்ல டூர்க்கு போய் இருக்காங்களான்னு தெரியல என்று கூறி இருக்கிறார்.