-விளம்பரம்-
Home பிக் பாஸ்

பிராங்க் நாமினேஷனுக்கு சொல்லும்போது நீங்க இருந்தீங்க தானே- பவித்ராவை டார்கெட் செய்த விஜய் சேதுபதி

0
351

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ஏழாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று ஏழாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவராகி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 8:

பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். அதோடு ரவீந்தர் செய்த பிராங்கை எல்லோரும் டார்க்கெட் செய்து பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார். அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

-விளம்பரம்-

பின் சாச்சனா வெளியில் நடப்பதை பற்றியும், ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார். சாச்சனா என்ட்ரி வேற லெவலில் இருக்கிறது. நேற்று எபிசோட்டில், விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் முதல் வாரத்தின் அனுபவத்தை குறித்து கேட்டிருந்தார். ஒவ்வொருவருக்கும் அவர் பதில் அடியும் கொடுத்திருந்தார். பின் அவர், நீங்கள் விளையாட வந்திருக்கிறீர்கள். யாரும் சொகுசாக சாப்பிட்டு, தூங்க வரவில்லை என்றும் பேசி இருந்தார். குறிப்பாக, ரவீந்தர் செய்த பிராங்க் குறித்து விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருந்தார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

பின் நீங்கள் ஏன் இந்த வார இறுதியில் வெளியே போவீர்கள்? என்று சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, நான் பண்ண சேட்டை தான் அதற்கு காரணம் என்று வேடிக்கையாக ரவீந்தர் கூறியிருந்தார். மேலும், இன்றைக்கான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, நீங்கள் பெண்களில் மூன்று பேர் வீக்காக இருப்பதாக ரவிந்தரிடம் சொன்னீர்களா என்று சாச்சனாவை கேட்கிறார். அதற்கு சாச்சனா இல்லை என்று சொன்னவுடன் ரவீந்தர், அவர் சுனிதா-சௌந்தர்யா-அன்சிதா பெயரை சொன்னார் என்கிறார். உடனே சுனிதா கோபப்பட்டு பேசுகிறார்.

இரண்டாவது ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் தர்ஷிகா, பவித்ரா என்னுடைய தோழி என்பதை தாண்டி எல்லோரும் ஓட்டு செய்ததால் தான் அவரை ஆண்கள் அணிக்கு அனுப்பினோம். ஆனால், பிராங்க் என்பது நாமினேஷன் காக நடந்தது. அதுவும் பவித்ராவுக்கு தெரிந்து நடந்தது என்றால் இது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்ல, விஜய் சேதுபதியும் இது பவித்ராவுக்கு தெரியும் என்று அவரைக் கேட்க, பவித்ராவும் ஒத்துக் கொள்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news