இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டதற்கு:
மும்தாஜ் தான் வெற்றி பெறுவார் நான் அவருக்கு தான் ஒட்டு போட்டுளேன் என்று கூறியுள்ளார்(பாவம் அண்னே நீங்க ஒட்டு போட்டும் அவர இந்த வாரம் வெளியே அனுப்பிட்டாங்க) . மேலும், முதல் சீனில் நீங்க அனைவருமே உண்மையாக இருந்தீங்க ஆனா இப்போ இருக்கறவங்க யாரும் உண்மையாக இல்லை என்று கேட்கப்பட்ட போது, அதை தான் கமல் சாரே சொல்லிட்டாரே என்று கூறியுள்ளார்.
மேலும், சீசன் 2 நிகழ்ச்சிக்கு உங்களை கெஸ்ட்டாக அழைத்தார்களா என்று கேட்டதற்கு:
என்னை கூப்பிட்டாங்க நான் போகல நல்லவங்க இருந்தா போகலாம் ஆனால், உள்ள இருக்கிறது எல்லாம் ஏழரை நாட்டு சனியன்களாக இருக்கிறது.நாம எங்க போறது என்று மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார். கமல் சார் தான் இருகாரே அவர் நல்லவர் தானே அப்போ நீங்க போகலாமே என்று கேட்கப்பட்ட போது, அவர் நல்லவர் தான் அவர் வெளியே தானே இருக்கிறார்.அவர் ஒரு நாளைக்கு உள்ளே இருந்து பார்க்கட்டும் இந்த சனியங்களோடு இருந்தாருன்னா ஓடியே போய்டுவாரு என்று கஞ்சா கருப்பு பதிலளித்துள்ளார்.




