முத்தம் கொடுத்தத மட்டும் சொல்றீங்க, கை உடைந்த போது இதெல்லாம் கூட எனக்கு அமீர் தான் பண்ணான் – உண்மையை சொன்ன பாவனி. இதோ வீடியோ.

0
919
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி திகழ்ந்து வருகிறது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த முறை பல மாற்றங்கள் நிகழ்ச்சியில் கொண்டு வந்திருந்தார்கள். இதில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது இடத்தை பிரியங்கா, மூன்றாவது இடத்தை பவானி ரெட்டி, நான்காம் இடத்தை அமீர் பிடித்து இருந்தார்கள். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்தும் சோசியல் மீடியா முழுவதும் அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்த பேச்சுகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

இதேபோல் முதல் சீசனில் ஓவியா-ஆரவ் மருத்துவ முத்தம் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர்- பாவனி அதிரடி முத்தம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்கள் பாவனி , அமீர். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. இருந்தாலும் இவர் தன் கணவனின் மறைவுக்கு பின் சில காலம் மீடியாவில் இருந்து விலகி இருந்து மீண்டும் சின்னத்திரை சீரியல், படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர்- பாவனி:

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனி திறமையாக விளையாடி இருந்தார். அதேபோல் அமீர் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தாலும் திடீர் என்று ஒரு நாள் அமீர், பாவனிடம் உன்னை காதலிக்கிறேன் , திருமணம் செய்து கொள்கிறேன், என்று கூறியிருந்தார். ஆனால், பாவனி, அமீரை தம்பி என்று சொல்லியும், இல்லை என்று சொல்லியும் மறுத்து வந்திருந்தார். இருந்தும் அமீர் விடாமல் தன்னுடைய காதலை தெளிவாக சொன்னார்.

அமீர் – பாவனி முத்தம் காட்சி:

பின் ஒரு நாள் இரவில் அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது போல் ஒரு காட்சி வந்தது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கடுமையாக அமீரை தாக்கி பேசி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்தும் அதை பற்றியே விமர்சனம் சென்று கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து அமீர் கூட பேசி இருந்தார். இருந்தாலும் இவர்களுடைய முத்தக்காட்சியை குறித்து பல்வேறு விமர்சனம் எழுகிறது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பவானி ரெட்டி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

-விளம்பரம்-

பாவனி அளித்த பேட்டி:

என்னை வைத்து தான் அமீர் பிரபலமானார் என்று சொல்வதெல்லாம் தவறு. அவர் திறமையாக விளையாடி வந்தார். என்னால் தான் அமீருக்கு நிறைய நெகட்டிவ் கமெண்டுகள் வருகிறது. உண்மையை சொல்லப்போனால் அவர் என்னிடம் காதல் சொல்லும் போது எனக்கு வெக்கமாக இருந்தது. அதோடு எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று தெரியவில்லை. அதனால் நான் சும்மா விளையாட்டுக்காக தம்பி என்று சொன்னேன். இதற்கு பலரும் தம்பி என்று சொல்லாதீர்கள் என்றார்கள். அவர்களுடைய உணர்வுகளை மதித்து நானும் அப்படி கூப்பிட வில்லை.

அன்று இரவு நடந்தது:

பின் நாங்கள் நன்றாக தான் விளையாடி வந்தோம். அன்று இரவு என்ன நடந்தது என்றால், அவர் என்னிடம் ஐ லவ் யூ சொல்ல கிட்ட வந்தார். அதை இவர்கள் எடிட் செய்து வேற மாதிரி காண்பித்து விட்டார்கள். உண்மையாக அமீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இதை தான் மக்கள் சர்ச்சையாகி வருகிறார்கள். அதேபோல் நிரூப்பிற்கு முத்தம் கொடுத்தது தவறில்லை. அமீர் எனக்கு முத்தம் கொடுத்தார்கள் என்று சர்ச்சை கிளப்பினார்கள். உண்மையில் அது முத்தம் கிடையாது. அவர் என்னிடம் கிட்டே வந்து ஐ லவ் யூ என்று மெதுவாக சொன்னது தான் என்று கூறி இருக்கிறார் பாவனி.

Advertisement