சிவாஜி வீட்டின் மருமகளானர் பிக் பாஸ் சுஜா வருணி..! திருமண புகைப்படங்கள்..!

0
500
suja

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்த இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.

suajavaru

நடிகை சுஜா வருணிக்கும், சிவகுமாருக்கும் ஏற்கனவே நிட்சயதார்த்தாம் நடைபெற்றதாகவும் தகவல்கல் வெளியான நிலையில் தனது காதல் கதை குறித்தும், தனது திருமணம் குறித்த தக்வல் குறித்தும் முதல் முறையாக அறிவித்திருந்தார் நடிகை சுஜா. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள சுஜா ஆகஸ்ட் 3 ஆம் தேதி 2017 ல் கும்பகோன்த்தில் உள்ள கோவில் வாசலில் தான் முதன் முதலில் அவரை பார்த்தேன். இப்போ 2018 ஆகிறது இத்தனை ஆண்டுகளில் நிறைய ஏற்ற தாழ்வுகளை நாங்கள் சந்தித்துள்ளோம்.

இத்தனை வருடங்களில் சந்தோசமாக இருப்பதை தாண்டி நிறைய கஷ்டங்களை நாங்கள் எதிர்கொண்டு வந்துள்ளோம் ஆனால், இப்போது ஓரு சுமுகமான நிறைவை எட்டியுள்ளோம். எங்களை நினைத்து நாங்கள் இருவருமே பெருமைபட வேண்டும். கடந்த நவம்பர் 19 தான் மிகப்பெரிய நாள் என்று கூறியிருந்தார் சுஜா. நடிகை சுஜா மற்றும் சிவாஜி தேவின் திருமணம் இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவீட்டாரும், பல பிரபலங்களும் பங்கேற்று இளம் தம்பதியை வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

sujav

sujavaruni

எங்களுடைய உறவு இத்தனை தூரம் வருமா என்று நான் கொஞ்சம் கூட நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் திருமணம் செய்துகொள்ள போகும் நபரின் பெயர் சிவகுமார்(சிவாஜி தேவ் என்பது செல்ல பெயர் ), திருமணத்திற்கு பின்னரும் அவருடன் எனது வாழ்வு இனிமையாக இருக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை இந்த அளவிற்கு புரிந்து கொண்ட ஒரு கணவர் எனக்கு கிடைக்கபோகிறார் என்பது நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவள் போல உணர்கிறேன். அதே போல இந்த மனுஷன தவிர வேற யாராலும் என்னுடன் வாழவே முடியாது. அவரை என்னுடைய கணவர் என்று சொல்வதை விட என்னுடைய குரு என்று தான் சொல்லவேன் என்று சுஜா வருணி ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.