தெரிஞ்சுதா சொல்றிங்களா? தெரியாம சொல்றிங்களா? தமிழ் நாடு பெயர் சர்ச்சைக்கு விக்ரம் கூறியதை கேட்டு ஷாக்கான டிடி.

0
614
vikraman
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி,அசல் கோளாறு, Adk ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 6 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த 1 வாரமாகவே பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்க்ளுக்கும் பழைய பிக் பாஸ் போட்டியாளர்களும் வந்த படியாக இருக்கின்றனர். மேலும் அவ்ரக்ளுக்கு பிக் பாஸ் டாஸ்க்கும் கொடுத்திருந்தார். மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் கமலஹாசன் உள்ளே வந்த போட்டியாளர்களிடம் கேள்விகளையும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இந்த நிலையில் பொங்கல் திருநாள் என்பதினால் பொங்கல் வைத்து பிக் பாஸ் வீட்டினர் கொண்டாடிய நிலையில் தொகுப்பாளராக டிடி விக்ரமனிடம் கேட்ட கேள்வியும் அவர் கூறிய பதிலும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

டிடி கேட்ட கேள்வி :

தொகுப்பாளர் டிடி பொங்கல் திருநாள் குறித்து விக்ரமனிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விக்ரமன் இந்த நாள் தைப்பொங்கல் நாள் மட்டும் கிடையாது நம்முடைய தமிழ் நாட்டிற்கு, தமிழ்நாடு என்ற பெயர் வைத்த நாளும் இருந்தான் என்று கூறினார், மேலும் முன்னர் “மெட்ராஸ்” மாகாணம் என்றிருந்த போது சங்கரலிங்கனார் என்பவர் தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்காக தன்னுடய உயிரை தியாகம் செய்தார்.

மரியாதையை செலுத்தும் நாள் :

சங்கரலிங்கனார் 14 நாட்கள் தொடர்ந்து உணாவிரதம் இருந்து உயிரிழந்த பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாடு என்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு வைத்தார். மேலும் தமிழ் நாடு என்று பெரியார் வைக்க போராடிய அனைவருக்கு மரியாதை செலுத்த இந்த நாளை நாம் கொண்டாடுகிறோம் என்று கூறினார். அதற்கு உடனே டிடி தமிழ் நாடு என்ற பெயரை தவிர வேறு எந்த பெயரும் சரியாக இருக்காது அல்லவா? எனக் கூற விக்ரமன் ஆமாம் என்று கூறினார்.

-விளம்பரம்-

“தமிழ் நாடு” தமிழ்நாடு தான் :

இதனையடுத்து பேசிய டிடி நீங்கள் இதனை தெரிந்து சொல்கிறீர்களா இல்லை தெரியாத சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. இறந்த விஷயம் தற்போது உங்களுக்கு புரியாது வெளியில் வந்தவுடன் புரியும் என்று கூறினார். இதனையடுத்து பேசிய விக்ரம் இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் ரோமில் நாட்டை பிரிக்க சிலர் முயற்சி செய்தனர். அப்போது நான் கூறினேன் நீங்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்தால் இந்த நாட்டை பெரியார் நாடு என்று சொல்லுவோம் என்று கூறிய விக்ரமன், ஆனால் தமிழ் நாடு என பெயர் வர உயிர் தியாகம் செய்த்தவர்களை கருத்தில் கொண்டு தமிழ் நாடு எப்போதுமே தமிழ் நாடுதான் என்று கூறினார்.

விக்ரமனை பாராட்டும் நெட்டிசன்கள் :

சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலத்தில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி நடந்தது அதனை கௌரவிக்கும் வகையில் சென்னையில் ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்த்தப்பட்டது. அப்போது அந்த விழாவில் பேசிய ஆளுநர் நடந்த ரவி தமிழ் நாட்டிடை தமிழகம் என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறினார். இவர் அப்படி கூறியது சர்ச்சையாக வெடித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் உள்ள விக்ரமன் தமிழ் நாடு எப்போதுமே தமிழ் நாடுதான் எனக் கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement