சுதா கொங்கராவால் கோபப்பட்ட சிவகார்த்திகேயன்? தயாரிப்பாளர் போட்ட ட்வீட்- பின்னணி இது தான்

0
160
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பினாலும் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது. இதை அடுத்து தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

புறநானூறு படம்:

இந்த படத்தை சுதா கொங்காரா மற்றும் அருண் விஷ்வா இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான முதல் பட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் இணைந்து லோகேஷ் கனகராஜ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், ரஜினியின் கூலி பட வேலைகள் இருப்பதால் லோகேஷ் கனகராஜ் விலகி இருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.

சிவா -சுதா சண்டை:

இதனால் நான்கு பேரையும் வைத்து லுக் டெஸ்ட் எடுக்க இயக்குனர் ஏற்பாடு செய்திருந்தார். இதுவரை இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் வெளியாகவே இல்லை. இந்த நிலையில் லுக் டெஸ்ட் எடுக்க எல்லோரும் வந்து இருந்தார்கள். அப்போது சிவகார்த்திகேயன் அதிகமாக தாடி வைத்திருந்தாராம். அதனை குறைக்க வேண்டும் என்று இயக்குனர் சுதா கூறியிருக்கிறார். இது சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் கடுப்பை ஏற்பட்டிருக்கிறது. உடனே சிவா, இப்படி இருந்தாலே போதும் என்றும், திடீரென்று சொல்வதால் எப்படி தாடியை எடுக்க முடியும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

சர்ச்சைக்கு காரணம்:

இதனால் சுதா கோபப்பட்டு படப்பிடிப்பில் இருந்தவர்களை காரணம் இல்லாமலே திட்டி இருக்கிறார். இதை அறிந்த சிவா யாரிடமும் சொல்லாமல் படபிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி இருக்கிறார். நீண்ட நேரம் கழித்து தான் பட குழுவினருக்கு சிவகார்த்திகேயன் அங்கு இல்லாதது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக சுதா தரப்பில் சிவகார்த்திகேயனிடம் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதை அடுத்து தயாரிப்பாளர் தரப்பில் சிவகார்த்திகேயனிடம் சமாதானம் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் பதிவு:

இதனால் அடுத்த கட்ட அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக புறநானூறு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் பருத்திவீரன் படத்தின் காட்சியை பகிர்ந்து இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை பரப்புபவர்களுக்கு தலையில் கொட்டு வைப்பது போல தான் இவர் இந்த பதிவை போட்டு இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றார்கள்.

Advertisement