ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருத்திகா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் தான் முதன் முதலாக ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் பிரம்மாண்டமாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது.
இம்முறை இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். அதேபோல் சமீபத்தில் ஹிந்தி பிக் பாஸ் 18 தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் சல்மான் கான் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை நடிகை ஸ்ருத்திகா ஹிந்தி பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகியிருந்த ‘ஸ்ரீ’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
ஸ்ருத்திகா குறித்த தகவல்:
அதற்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதற்குப் பிறகு இவர் தனியாக youtube சேனலை தொடங்கி இருக்கிறார்.
பிக் பாஸில் ஸ்ருத்திகா:
அதில் எக்கச்சக்கமான ரசிகர்கள் இவரை பாலோ செய்கிறார்கள். தற்போது ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியில் கலந்து கொள்ளும் முதல் தமிழ் பெண் என்ற பெருமையை ஸ்ருத்திகா பெற்றிருக்கிறார். இவரின் அடையாளமே வெகுளியான பேச்சும், குறும்புத்தனமும் தான். அதனால் முதல் நாளே இவர் தன்னுடைய சேட்டைகளால் சல்மான் கானை கவர்ந்தார். சமீபத்தில் கூட, ‘சும்மா’ என்ற தமிழ் வார்த்தையை ஹிந்தி பிக் பாஸில் பேசி, யார் இந்த ஸ்ருத்திகா என ஹிந்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யும் அளவுக்கு இவர் மாறியுள்ளார்.
ஸ்ருத்திகாவுக்கு நடந்த கொடுமைகள்:
மேலும், ஹிந்தி பிக் பாஸில் இருந்தாலும் தன்னை மீறி ஸ்ருத்திகா ஒரு சில சமயங்களில் தமிழில் பேசி விடுவதால் அவர் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டார். அதேபோல் அங்குள்ள போட்டியாளர்கள் சிலருக்கு அவர் தமிழும் கற்றுக் கொடுத்து வருகிறார். ஆனால், ஸ்ருத்திகா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் அவரை பற்றி தவறாக முதுகுக்கு பின்னால் பேசி வருகிறார்கள். அதோடு ஸ்ருத்திகா தொடர்ந்து ஹிந்தியில் பேசினாலும், அவர் பேசும் விதத்தில் தமிழ் ஸ்லாங் வந்துவிடுகிறது. இதனால் அங்குள்ள சிலர் அதை வைத்து அவரை கிண்டல் செய்கிறார்கள்.
#ShrutikaArjun took stand against the mocking of her language and tamilnadu accent.
— Bigg Bossiya (@BiggBossiyaa) October 14, 2024
She felt #AliceKaushik intentionally mock her south indian accent #BiggBoss #BiggBoss18 #ShrutikaRajArjun pic.twitter.com/Oikl761IOv
ஸ்ருத்திகா கொடுத்த பதிலடி வீடியோ:
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் கொடுத்த டாஸ்கில் ஸ்ருத்திகா, போட்டியாளர் ஒருவரை பெயரை சொல்லி, நான் பேசும் விதத்தையும், மொழியையும் வைத்து நீங்கள் கேலி கிண்டல் செய்வது எனக்கு நன்றாகவே தெரிகிறது. கிண்டலுக்கும் காமெடிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அது இரண்டிற்குமே அர்த்தம் எனக்கு தெரியும். நீங்கள் என்ன வேணாலும் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நான் எல்லாத்தையும் எதார்த்தமாக தான் எடுத்துக் கொள்வேன். எல்லாம் பேசிவிட்டு எனக்கு தமிழ்நாடு ரொம்ப பிடிக்கும், தமிழ் மொழி பிடிக்கும் என்று சொல்வது தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று வடக்கன்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ருத்திகா பேசியிருந்தார்.