பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய நிகழ்ச்சியில் பைனலுக்கு நேரடியாக சென்றுள்ள ஜனனியை தவிர மற்ற அனைவருமே இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டனர். மேலும், போட்டியாளர்கள் அனைவருக்குமே தனித்தனியாக டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்கபட்டு அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபடும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

Advertisement

இந்த டாஸ்கின் போது ஐஸ்வர்யாவிற்கும், விஜலக்ஷ்மிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மி சென்ற நாளில் இருந்து ஐஸ்வர்யாவிற்கும், விஜய்க்கும் தான் அடிக்கடி முட்டிக்கிகொள்கிறது. அந்த ஒரு டாஸ்க் என்றாலும் இருவரும் எலியும், பூனை போல சண்டையிட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்கின் போது ஐஸ்வர்யா விஜி மீது volini spray வை அடித்ததிருந்தார்.

ஆனால், இன்று ஒளிபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்றில் ஐஸ்வர்யாவின் கையில் சில மூட்டைகளை கட்டுகிறார் விஜி, இதன் பின்னர் ஸ்மோக்கிங் ரூமில் அழுது கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, இது physical டார்ச்சர் எனது உடல் மிகவும் வலிக்கிறது என்று கதறி அழுகிறார். இதையடுத்து பாலாஜியிடம் பேசிக்கொண்டிருக்கும் விஜயலக்ஷ்மி, நான் அழவில்லை என்பதற்காக எனக்கும் ஓன்னும் ஆகவில்லை என்று அர்த்தம் இல்லைஅவர்களுக்கு மட்டும் தான் உடலா என்று கூறுகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வ்ர்யா நாடகமாடுகிறார் என்று பதிவிட்டுள்ளார். சமீபத்தில் அவர் பதிவிட்டுள்ளது என்னவெனில், ஏன்மா நீ விஜயலக்ஷ்மி மேல volini spray வை அடிச்ச. அதுக்கு அப்புறம் தான் அத வேண்டாம்னு சொன்னாங்க, இருந்தும் அதை அவள்(விஜி) தைரியமாக ஏற்றுக்கொண்டாள். நேற்று விஜிக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். fake ஐஸ்வர்யா என்று பதிவிட்டுள்ளார்.

விஜலட்சுமியை நேற்று டாஸ்க் செய்து கொண்டிருந்த போது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மாறி மாறி விஜயலக்ஷ்மி மீது ஷேவிங் கிரீம், கோலமாவு, முட்டை என்று அனைத்தையும் வீசினர்.மேலும், ஐஸ் பேக்கையும் விஜயலக்ஷ்மி மீது வைத்த ஐஸ்வர்யா volini spray வை எடுத்து விஜியின் கண்கலில் அடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், விஜி தனது கைகளை வைத்து மூடிக்கொண்டார். பின்னர் ரித்விகா, spray பயன்படுத்தாதீர்கள் என்று சொன்ன பிறகே ஐஸ்வர்யா spray அடிப்பதை நிறுத்தினார். அது மட்டும் டாஸ்க் என்றால் விஜி செய்ததும் டாஸ்க் தான் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.

Advertisement