அபிராமி மற்றும் மீராவிற்கும் என்ன தொடர்பு.! இந்த புகைப்படம் மற்றும் விடியோவை பாருங்க புரியும்.!

0
5535
Meera-Mithun-Abhirami

கடந்த இரண்டு நாட்களாக காரசாரம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மீரா மிதுனின் என்ட்ரிக்கு பின்னர் படு ஜோராக சூடு பிடித்துள்ளது. நேற்று மீரா மிதுனை பிக் பாஸ் வீட்டில் கண்ட உடன் முகத்தில் பொலிவிழந்து போனது அபிராமி தான்.

Miss South India 2017

டாஸ்க் என்ற பெயரில் மீரா மிதுனை பங்கமாக காலாய்த்தார் அபிராமி. மேலும், மீரா மிதுனை தனக்கு நன்றாக தெரியும் எனவும், அவர் செய்த் பிராடுத்தனமும் தனக்கு நன்றாக தெரியும் எனவும் கூறிய அபிராமி, இது போன்ற ஆட்களைஎல்லாம் ஏன் அனுப்பு கிறார்கள் என்று கொஞ்சம் ஓவராகவே பேசி இருந்தார்.

இதையும் பாருங்க : இணையத்தில் லீக்கான மூன்றாவது ப்ரோமோ.! சித்தப்பு வேலைய ஆரம்பிச்சுட்டார்.! 

- Advertisement -

இந்த நிலையில் மீரா மிதுனுக்கும், அபிராமிக்கு என்ன சம்மந்தம் என்று விளக்குகிறது இந்த புகைப்படம். மீரா மிதுன் கடந்த 2016 ஆம் ஆண்டு மிஸ் தமிழ் நாடு பட்டத்தை வென்ற பிறகு ஒரு சில மிஸ் அழகி போட்டிகளில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், அந்த வகையில் 2017 ஆம் ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டி நிகழ்ச்சியில் அபிராமியும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

Image result for miss south india 2017

இந்த அழகி போட்டியில் பவித்ரா என்பவர் பட்டத்தை வெல்கிறார். இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டத்தை முன்னாள் அழகியான மீரா மிதுன் தான் பவித்ராவிற்கு வழங்குகிறார். அதே மேடையில் தான் அபிராமியும் நின்றுகொண்டிருக்கிறார். அந்த காட்சிகளை நீங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

இப்படி துறை ரீதியாக அபிராமிக்கு, மீரா மிதுனை நன்றாகவே தெரியும். ஆனால், கடந்த சில மாதங்களாக மீரா மீதுன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது அபிராமிக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் மீரா மிதுனை இந்த அளவிற்கு வெறுக்கிறார் அபிராமி. இருப்பினும் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சனை என்று தான் புரியவில்லை.

Advertisement