இணையத்தில் லீக்கான மூன்றாவது ப்ரோமோ.! சித்தப்பு வேலைய ஆரம்பிச்சுட்டார்.!

0
1393
Bigg-boss-promo

காதலும் கலகலப்புமாக இருந்த பிக் பாஸ் வீடு இன்று மனக்கசப்பும் சலசலப்புமாக மாறியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே நேற்றய நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக களமிறங்கிய மீரா மிதுன் தான். அவர் உள்ளே நுழைந்ததும் சாக்ஷி மற்றும் அபிராமி முகத்தில் அப்படி ஒரு வெறுப்பே தெரிந்தது.

நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மீதுன் நுழைந்ததும் அவருக்கு நேற்று போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்ட மாலை அணிவிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது அவருக்கு மீரா மிதுனை சங்கடபடுத்த வேண்டும் என்றே சில டாஸ்குகளை கொடுதார் சாக்ஷி. இதனை கண்ட ரசிகர்கள் அனைவருக்கும் கொஞ்சம் ஷாக்காகவே இருந்தது.

- Advertisement -

ஆனால், பின்னர் ஆராய்ந்ததில் மீரா மிதுன் பற்றி சாக்க்ஷி மற்றும் அபிராமிக்கு ஏற்கனவே தெரியும் என்றும். மீரா மிதுன் அழகி போட்டியை நடத்துவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அபிராமி மற்றும் சாக்ஷி மாடல் அழகிகள் என்பதால் மீரா மிதுனை பற்றி தெரிந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

இன்றைய முதல்ப்ரோமோவில் கூட அபிராமி மற்றும் மீரா மிதுனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பின்னர் வனிதா, அபிராமிக்கு ஆதரவாக பேசினார். தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவில் சரவணனும் மீரா மிதுனுக்கு எதிராக திரும்பியுள்ளது போன்றே தோன்றுகிறது.

Advertisement