பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கும், சண்டைக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. அதே போல காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமே இருந்தது இல்லை. முதல் சீசனில் ஓவியா ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா மஹத், ஐஸ்வர்யா ஷாரிக் இப்படி பலர். அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஒரு புதிய லவ் ஸ்டோரி ஒன்று லேசாக தீப்பிடிக்க துவங்கியுள்ளது.
அது வேறு யாரும் இல்லை கவின் மற்றும் அபிராமி தான். தற்போது இவர்கள் இருவரது காதல் டாபிக் தான் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. நேற்றய நிகழ்ச்சியில் ஷெரினுடம் பேசிய அபிராமி, கவின் மீது தனக்கு காதல் இருப்பதாக கூறியிருந்தார். மேலும், கவினை சரவணன் மீனாட்சி தொடரில் இருந்தே தெரியும் என்றும் அவரும் நானும் நீண்ட நாள் முக நூல் நண்பர்கள் என்றும் கூறியிருந்தார்.
இதையும் பாருங்க : பாத்திமாவை சைட் அடித்த சாண்டி.! கடுப்பான பாத்திமா.! நேற்றைய நிகழ்ச்சியில் நீக்கப்பட்ட காட்சிகள்.!
அபிராமிக்கு கவின் மீது காதல் மலர்ந்துள்ளதை கண்டு பல பிக் பாஸ் ரசிகர்களும் புகைந்து வரும் நிலையில் கவினின் நெருங்கிய நபர் ஒருவர் கவினை கேட்ட வார்த்தையில் திட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வேறு யாரும் இல்லை அருவி படத்தில் நடித்த பிரபல நடிகர் தான்.
அருவி படத்தில் டிவி தொலைக்காட்சியில் ”பீட்டர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. அந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக கவரப்பட்டது. மேலும், இவரும் கவனின் நீண்ட வருடகால நெருங்கிய நண்பர்கள். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போது அவர் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார் பிரதீப்.
ஆனால், நேற்று அபிராமி, கவின் மீது தனக்கு காதல் இருக்கிறது என்று அறைந்த பிரதீப், தனது முகநூல் பக்கத்தில் கவீணை கேட்ட வார்த்தையில் திட்டியதோடு, நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. மக்களே அவரை உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க என்று நட்புரீதியாக கலாய்த்துள்ளார் பிரதீப். இதனை கண்ட இவரது நண்பர்களும்’கவின் அப்படி எல்லாம் எளிதில் விழ மாட்டான் ‘ என்று கமன்ட் செய்து வருகின்றனர்.