கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதும் மக்களிடையே அதிக ஆதரவையும், அன்பையும் பெற்று வருகிறது. மேலும்,விஜய் டிவியில் ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 1,சீசன் 2 என்று இரண்டு நிகழ்ச்சிகள் முடிவடைந்து.ஆனால், மத்த இரண்டு சீசன்களை விட இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மட்டும் வேற லெவல், மாஸ் காட்டுச்சுன்னு கூட சொல்லலாம்.ஏன்னா, அந்த அளவிற்கு நிகழ்ச்சி அதிர வைத்தது. மேலும், இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பல பிரபலமானதற்கு முக்கியமான காரணம் என்று பார்த்தால் கலவரங்கள் ,காதல்கள் , சண்டைகள்,சர்ச்சைகள் என பயங்கரமாக வீடே கலை கட்டியது.இந்த சீசனில் 16 போட்டியாளர்கள்,90 கேமராக்கள் என பிக் பாஸ் செட்டு பட்டைய கிளப்பியது. வழக்கம் போல் இந்த பிக்பாஸ் சீசன் 3ன் தொகுப்பாளர் நம்ம “உலகநாயகன் கமல்ஹசன்” தாங்க.
மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக பண்டிகை போல சிறப்பாக முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்று இருந்தார்கள். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ். மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடினார் . இதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆனார். மேலும்,இரண்டாம் இடத்தை சாண்டியும்,மூன்றாவது இடத்தை லாஸ்லியாவும் பிடித்து உள்ளார்கள். எப்பவுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே அதை பற்றி அப்படியே விட்டு விடுவார்கள்.
இதையும் பாருங்க : லலிதா திருடனுடன் தொடர்புடையது சிவகார்த்திகேயன் பட நடிகையா.. இதோ அடுத்த ஷாக்..
ஆனால், தற்போது முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பற்றி மட்டும் இன்று வரையும் மக்களிடையே ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் அழைப்பார்கள்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் பாடிய பாடல் செம்ம ஹிட்டு .மேலும், ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். எப்பவுமே பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்சு உடனே பிக்பாஸ் நிகழ்ச்சியின் கொண்டாட்டம் ஒளிபரப்பு செய்வார்கள். இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த கொண்டாட்டத்தில் எதிர் பார்த்ததை போல சரவணன் மதுமிதா பங்குபெறவில்லை. மேலும், மீரா மிதுன், ரேஷ்மா ஆகியோர் கூட பங்குபெறவில்லை.
மேலும், இதில் நம்ப முகென் அவர்கள் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் அந்த நிகழ்ச்சி எப்ப விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. இது குறித்த தகவல்கள் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டும் இல்லைங்க பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டத்தில் யார்? யார்? எப்படி வருவாங்க? என்ன? பண்ணுவாங்கன்னு பயங்கர குஷியில் உள்ளனர் ரசிகர்கள். நம்ம எல்லாருக்குமே தெரியும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே முகென் எப்பவுமே பாட்டு பாடி, நடனமாடி தான் இருப்பார். அவர் பிக்பாஸில் இருக்கும்போது பாடிய ஒவ்வொரு பாடல்கள் தமிழ் நாட்டு ரசிகர்களை மட்டுமல்ல உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர வைத்தது.
அதோடு பிக்பாஸ் வீட்டில் அவர் பாடிய ” நீதான் நீதான்” என்ற பாடல் ஒரே நாளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பார்க்க வைத்தது. இந்த நிலையில் முகென் பாடிய பாடலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பாடிக் கொண்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் முகென் மீண்டும் “நீதான் நீதான்” என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்டவுடன் அரங்கத்தில் உள்ள ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கூச்சல் போட்டு கொண்டு இருந்தார்கள். இது மட்டும் இல்லைங்க அவர் ஏற்கனவே எழுதியுள்ள பாடல்களையும் பாடி பாடியுள்ளார். இதற்கான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்கள் ரசிகர்கள். விஜய் டிவியில் எப்ப இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப போகிறார்கள்? என்ற பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். இது மட்டும் இல்லைங்க லாஸ்லியா அவர்கள் நடனமாடிய வீடியோவையும் வெளியிட்டு உள்ளார்கள். அவர்களோடு கவினும் நடனமாடியுள்ளார். மேலும்,அதற்கான வீடியோவும் இணையங்களில் வெளியிட்டுள்ளார்கள்.