ஒரே நாளில் ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்து நடிகர் சதீஷ் செய்த டீவீட்டை பாருங்க.!

0
3066
Losliya
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் சதீஷ் எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருவார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மிகப்பெரிய ரசிகரும் ஆவார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது போட்டியாளர்களை குறித்து அடிக்கடி ட்வீட் செய்து வந்தார் சதீஷ். தற்போது இந்த சீசனையும் பின் தொடர்ந்து வருகிறார் சதீஷ்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி இரண்டு நாட்களே ஆகியுள்ளது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல நடிகர் நடிகைகள் போட்டியாளராக பங்குபெற்றாலும். ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத சில போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவும் ஒருவர்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் உண்மையான மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.!

- Advertisement -

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா இலங்கையில் சக்தி என்கிற தொலைக்காட்சியில், தொகுப்பாளினியாகவும், செய்திவாசிப்பாளராக அனைவராலும் நன்கு அறியப்பட்டவர். இலங்கை கிழக்கு மாகாணம் திருகோணமலை சேர்ந்த லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டார்.

லாஸ்லியா யார் ? என்ன ? என்ற விவரம் இணையத்தில் வெளியாவதற்கு முன்பாகவே இவருக்கென்று பல்வேறு ஆர்மியை ரசிகர்கள் உருவாக்கிவிட்டனர். Losliya Army, Losliya Fc என்று பல்வேறு பக்கங்கள் இணையத்தில் உலா வருகிறது. இதனை குறிப்பிட்டுள்ள காமெடி நடிகர் சதீஷ், அடப்பாவிங்களா அதுக்குள்ளயே ஆர்மியா என்று ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஆர்மிக்களை துவங்குவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அவை பிக் பாஸ் நிகழ்ச்சி சிறிது நாட்கள் போட்டியாளர்களின் குணத்தை அறிந்த கொண்ட பின்னரே ரசிகர்கள் ஆர்மிக்களை துவங்குவார்கள். ஆனால், லாஸ்லியாவிற்கு 24 மணி நேரத்திலேயே பல ஆர்மியை திறந்துள்ளார் ரசிங்கர்கள்.

Advertisement