பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவீங்களா ? ரசிகர் கேட்ட கேள்விக்கு பிக் பாஸ் குறித்து யாரும் அறியாத விஷத்தை சொன்ன இந்திரஜா.

0
1222
indraja

இந்தியா முழுவதும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களை தொடர்ந்து வெற்றிகரமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

மூன்று வருடங்களாக இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.ஏப்ரல், மே வில் ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சீசன் 1 ஆரம்பித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவல்ல போனது.

இதையும் பாருங்க : 3 வயதில் ராஜா, 1000 குதிரை, தங்க பல்லக்கு – மெய் சிலிர்க்க வைக்கும் சிங்கம்பட்டி ஜமனின் கதை.

- Advertisement -

சீசன் 2வை விட சீசன் 3 நிகழ்ச்சி பட்டையை கிளப்பியது. தற்போது மே, ஜூன் மாதம் வரப்போவதால் சீசன் 4க்கான டைம் வந்து விட்டது. இந்நேரத்துக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் பங்குபெற போகிறார்கள் என்று அடிக்கடி சமூக வலைதளத்தில் சில பெயர்கள் அடிபடுகிறது.

அந்த வகையில் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரோபோ ஷங்கர் மகளும் அல்லது அவரது மனைவி பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்த இந்திரஜா, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளால் நான் போவேன். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு செல்ல நான் மேஜர் இல்லையே என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேஜர்களை மட்டும் தான் அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement