பிக் பாஸ் 4-ல் பிரபல நடிகரின் மகனா. அவரே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
1007
abihaasan

இந்நேரத்திற்கு பிக் பாஸ் ஒரு பாதி நாட்களை கடந்த்து இருக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிக்கொண்டு வந்தது. இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்த நிலையில் தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி துவங்கப்பட்டது. இதையடுத்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது. இதுவரை இரண்டு ப்ரோமோவும் வெளியானது.

இந்த வாரம் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சமீபத்தில் கூட ஷிவானி பிக் பாஸில் கலந்து கொள்வது உறுதி என்று தகவல் வெளியான நிலையில் ரியோ ராஜ், கிரண், ரம்யா பாண்டியன், வேல் முருகன் அர்ச்சனா போன்ற பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீஸனில் நடிகர் நாசர் மகன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. நடிகர் நாசர் கமலுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் நாசர் மகனும் கமல் மகள் அக்சரா ஹாசன் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது. நாசர் மகனை கமல் சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் தான் பிக் பாஸில் கலந்துகொள்ளவில்லை என்று அபி ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகையுள்ளது. அது குறித்து நம்பகரான தகவல் வந்ததும் வேறு ஒரு பதிவில் அப்டேட் செய்கிறோம்.

-விளம்பரம்-
Advertisement