பிக் பாஸ் 4-ல் நுழைந்த தமிழ் நடிகை – அட இவர் போன சீசன்லயே பஞ்சாயத்த கிளப்பியர் ஆச்சே.

0
64599
biggboss

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாபெரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் இன்னும் வாரங்களில் துவங்க இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும்.

ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது. அவ்வளவு ஏன் இதுவரை போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழை போலவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதுவரை 3 சீசன்களை கடந்து உள்ளது. தெலுங்கில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை, செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

அதேபோல தமிழில் இதுவரை இரண்டு ப்ரோமோக்கள் வெளியாக இருக்கிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த சீசனில் நடிகை சனம் ஷெட்டி கலந்து கொண்டு உள்ளதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். பின்னர் அவரிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டு இவருக்கு வழங்கப்பட்டது.மேலும், கடந்த சீசனில் கலந்து கொண்ட தர்ஷனை இவர் காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவரை திருமணம் செய்துகொள்ளாமல் தர்ஷன் ஏமாற்றியதாக போலீசில் புகார் கூட அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Advertisement