இளசுகளை ஈர்க்க பிகில் நடிகை கிளாமருக்கு இவங்க, வம்பிழுக்க இவங்க. இது தான் பிக் பாஸ் 4 லிஸ்டா?

0
3770
biggboss
- Advertisement -

இந்தியா முழுவதும் பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களை தொடர்ந்து வெற்றிகரமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. மூன்று வருடங்களாக இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Sakthi Masala Sema Taste Ep1 Star Samayal Robo Shankar Family ...

ஏப்ரல், மே வில் ஐபிஎல் முடிந்தவுடன் ஜூன் மாதம் என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சீசன் 1 ஆரம்பித்த போது பிக்பாஸ் நிகழ்ச்சி வேற லெவல்ல போனது. சீசன் 2வை விட சீசன் 3 நிகழ்ச்சி பட்டையை கிளப்பியது. தற்போது மே, ஜூன் மாதம் வரப்போவதால் சீசன் 4க்கான டைம் வந்து விட்டது. இந்நேரத்துக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் தேர்வு செய்திருப்பார்கள்.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தின் பட்ஜெட்டை லோகேஷ் கனகராஜ் இப்படி தான் குறைத்தாரா ? அவருக்கு சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

- Advertisement -

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் இடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக இழுத்து கொண்டிருப்பதால் உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்பது தெரியவில்லை. ஹீரோ, ஹீரோயின்கள், காமெடியன், கிளாமர் ஆக ஒரு பிரபலம், வீட்டோடு பெரியவங்க என்று இப்படித் தான் பிக் பாஸ் போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

Amritha Aiyer Movies, News, Photos, Age, Biography

அந்த மாதிரி சீசன் 4ல் யார் கிட்ட எல்லாம் பேசி இருக்கிறார்கள் என்று பார்த்தால் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா இடம் பேசி இருக்கிறார்கள். நடிகர் மனோபாலா இடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும், கதாநாயகியாக சாந்தினி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வழக்கம் போல் சாந்தனி இது எல்லாம் வதந்தி என்று கூறி இருந்தார். அதனால் சாந்தனி பிக்பாஸ் 4ல் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது.

இதையும் பாருங்க : என் ராசாவின் மனசிலே படத்திற்கு முன்பாகவே டி ஆர் படத்தில் தோன்றியுள்ள வடிவேலு. புகைப்படம் இதோ.

-விளம்பரம்-

மேலும், நடிகை சுனேனா, அதுல்யா ரவி, அமிர்தா ஐயர் போன்ற பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிரண், பூனம் பஜ்வா இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நடிகை பூனம் பஜ்வா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களை தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியல் இர்பான், கடந்த சீசனுக்கு மதுமிதா மாதிரி இந்த சீசனுக்கு வித்யூலேகா ராமன் இடமும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

குக் வித் கோமாளி புகழ் இதில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதாநாயகனாக யார் இருக்கப்போகிறார்கள் கேட்ட வடசென்னை படத்தில் தனுஷ்க்கு மச்சானாக நடித்த சரன் சக்தி மற்றும் டிக் டாக் பிரபலம் அக்ஷய கமலும் இதில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பாரதி கண்ணம்மா சீரியல் அகில் கூட லிஸ்டில் இருக்கிறாராம்.

இதுபோக சஞ்சனா, விமல், ராதாரவி, ரம்யா பாண்டியன் என்ற பல பெயர்கள் பட்டியலில் அடிபட்டு வருகிறது. எப்படியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு மாடலிங், பாடகர், மலேசியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூரிலிருந்து யாராவது ஒருவர் கண்டிப்பாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த தகவல்கள் தான் கிடைத்து இருக்கிறது. இந்த லிஸ்டில் யாரெல்லாம் நிகழ்ச்சியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்களோ அவர்கள் பெயர்களை கீழே கமெண்ட் பண்ணுங்கள்.

Advertisement