தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான ‘கைதி’யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.
அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடைந்த நிலையில் இந்த படம் இம்மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால், ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இதையும் பாருங்க : என் ராசாவின் மனசிலே படத்திற்கு முன்பாகவே டி ஆர் படத்தில் தோன்றியுள்ள வடிவேலு. புகைப்படம் இதோ.
மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினரான எக்ஸ் பாக்ஸ் நிறுவனம் தான் தயாரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜட் மற்றும் லோகேஷ் கனகராஜின் சம்பளம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் 180 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. ஆனால் மாஸ்டர் படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் லோகேஷ் கனகராஜ் அணுகியபோது அவர் இந்த படத்தை முடிக்க 30 முதல் 40 கோடி வரை இருந்தால் போதும் என்று கூறியுள்ளாராம்.
ஆனால், விஜயின் மார்க்கெட் வேல்யூ மற்றும் விஜய்யின் முந்தைய படங்களை கருத்தில் கொண்டும் இந்த படத்தின் பட்ஜெட்டை உயர்த்திக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் லோகேஷ் கனகராஜ் கனகராஜிடம் கேட்டுள்ளது இருப்பினும் அதனை மறுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இந்த படத்திற்கு என்ன வேண்டுமோ அது மட்டும் இருந்தால் எனக்கு போதும் என்று தயாரிப்பாளரிடம் கூறியுள்ளாராம்.
இதையும் பாருங்க : திருட்டுதனமாக மது விற்பனை. கையும் களவுமாக சிக்கிய திரௌபதி பட நடிகர். இயக்குனர் கொடுத்த பதில்.
இதையடுத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்காக 1.5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது போக இந்த படத்தினை வெற்றிகரமாக முடித்ததற்காக விஜய் தனிப்பட்ட முறையில் லோகேஷ் கனகராஜுக்கு இரண்டு கோடி ரூபாய் சன்மானமாக வழங்கியதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய்க்கு 80 கோடி சம்பளம் என்று வருமான வரித் துறையை உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.