கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழை போலவே ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சமயத்தில் அனைத்து மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இருந்திருக்கும். ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படாமல் இருக்கிறது.
தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே தெலுங்கிலும் இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து உள்ளது. பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை முதல் சீசனை ஜூனியர் NTR தொகுத்து வழங்கி வந்தார். அவருக்கு நல்ல வரவேற்பு, ரசிகர்களும் அதிகம் என்பதால் சம்மந்தப்பட்ட சானல் முன்னேற்றம் கண்டது.இதனால் இரண்டாவது சீசனிலும் அவரையே கமிட் செய்ய திட்டமிட்டனர்.
ஆனால், அந்த சமயம் என் டி ஆருக்கு தேதி கிடைக்காததால் நடிகர் நாணியை இரண்டாம் சீசனின் தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்த்தனர். ஆனால், முதல் சீசனை போல இரண்டாவது சீசன் வரவேற்பை பெறவில்லை இதனால் மூன்றாவது சீசனை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் லோகோ வெளியாகியுள்ளது. மேலும், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இதனால் தெலுங்கு பிக் பாஸ் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். எனவே, இது பிக் பாஸ் 4கான ஷூட்டிங்காக இருக்குமோ என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.