அரசியலில் தீவிரம் காட்டும் கமல், வேறு ஒரு நடிகருடன் முன் எச்சரிக்கையாக பேச்சு வார்த்தை – இவரு கரக்டா இருப்பாரா ?

0
615
bb5

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg-boss

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது. ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : நடிகை கௌதமின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா. வைரலாகும் திருமண புகைப்படம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப விஜய் தொலைக்காட்சி என்டிமால் நிறுவனத்துடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளதாம். எனவே, இனி வரும் 6 சீசன் வரை பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாகும். ஒருவேளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு பதிலாக வேறு யாரவது வரலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் 5ஆம் சீசனை தொகுத்து வழங்க சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

Simbu (aka) STR photos stills & images

நடிகர் சிம்பு 4வது சீசன் ஆரம்பிக்கும் முன்பே அந்த சீசனை தொகுத்து வழங்கப் போவதாக தகவல்கள் வெளியானது. அதே போல தற்போது கமல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவர் பிக் பாஸ் 5 பங்குகொள்ள மறுத்தால் என்ன செய்வது என்று சிம்புவிடம் பிக் பாஸ் குழு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மேலும், சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement