‘100 நாள் உன்ன பாக்காம’ – பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளருக்கு வெங்கட் பிரபு போட்ட டீவீட்.

0
4308
abhishek
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி என்று சொல்லலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதனிடையே இந்த சீசனில் கலந்துகொள்ளப் போவது யார் யார் என்ற லிஸ்ட் அடிக்கடி உலா வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் பிரபல சினிமா விமர்சகரான அபிஷேக் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ரஷி கண்ணாவின் பாய் பிரென்ட்டாக நடித்து இருப்பார். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் ருக்க முடியாது. அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள்.

இதையும் பாருங்க : இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் SK, தன் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் – அவரே சொன்ன வீடியோ இதோ.

- Advertisement -

இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வெளியானதும், பிரபல யூடுயூப் விமகரான பாண்டா பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்து இருந்தார். அதில் . ஆனால், அந்த பதிவை உடனே நீக்கிவிட்டார். அபிஷேக் ராஜாவை நினைத்து பாவமாக இருக்கிறது அவரை தனிப்பட்ட முறையில் தெரியும் 24 மணி. நேரமும் 20 கேமராவுக்கு முன்னால் அவர் கண்டிப்பாக ரசிகர்களை எரிச்சல் மட்டும் தான் அடையச் செய்வார். நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் மகிழ்ச்சிதான் என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், அதனை உடனே நீக்கிவிட்டார் பிரசாந்த். இருப்பினும் அந்த ஸ்க்ரீன் சாட் சமூக வளைத்தளத்தில் வைரலானது. இன்று அபிஷேக் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பிறந்தநாள் வாழ்த்துகள் , அடுத்த 100 நாள் உன்ன நேர்ல பாக்காம இருக்க வாழ்த்துக்கள், கலக்கு என்று பதிவிட்டு, அபிஷேக் பிக் பாஸில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement