விஜய் டிவி நிகழ்ச்சியில் இமானின் முன்னாள் மனைவி கலந்துகொள்ளப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் இமான் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்ன இவர்களுக்கு Veronica மற்றும் Blessica என்ற இரு மகள்களும் பிறந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக அறிவித்து இருந்தார் இமான்.அதுவும் விவகாரத்து நடந்து ஓராண்டிற்கு பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எமலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் இமான்.
இமானின் இரண்டாம் திருமணத்திற்க்கு பின் இமான் குறித்து பதிவிட்டுள்ள இமானின் முதல் மனைவி மோனிகா ‘உங்களின் இரண்டாம் திருமணத்திற்கு வாழ்த்தும் இமான். 12 வருடங்கள் வாழ்ந்த ஒருவரை மாற்றுவது இவ்வளவு சுலமபம் என்றால், உங்களை போன்ற முட்டாளுடன் வாழ்ந்து என் நேரத்தை வீணடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதற்காக நான் உண்மையாக வருந்துகிறேன். உங்களின் சொந்த குழந்தையை கடந்த இரண்டு வருடங்களாக பார்க்கவும் இல்லை கவனிக்கவும் இல்லை.
இமானை சாடிய மோனிகா :
ஆனால், அவர்களுக்கு பதில் வேறு ஒருவரை உங்களால் தேடமுடிந்து இருக்கிறது. ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து என் மகள்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன். தேவைப்பட்டாள் அந்த புதிய மகளை கூட நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்று பதிவிட்டு உள்ளார். ஏற்கனவே, குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து ஏமாற்றி புதிய பாஸ்போர்ட் பெற்ற முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
முன்னாள் மனைவி குற்றச்சாட்டு :
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதோடு விசாரணையானது ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மோனிகா, டி. இமான் பாஸ்போர்ட் தொலைந்து போனதாக கூறி பாஸ்போர்ட் கொடுக்க மறுத்த காரணத்தால் தான் புது பாஸ்போர்ட்டுக்கு பதிவு செய்ததாவும், குழந்தை கஸ்டடி உரிமையை வைத்திருக்கும் தனக்கே அந்த உரிமையுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிக் பாஸில் மோனிகாவா :
அதோடு இமான் முன்னாள் மனைவிக்கு எந்தவித ஜீவனாம்சம் கொடுக்கவில்லையாம். பிள்ளைகளின் செலவுக்கு மாதம் ரூ. 5000 மட்டும் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் மோனிகா, பிக் பாஸ் 6ல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. பிக் பாஸ் 6 பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று ஆர்வம் தற்போதில் இருந்து ஆரம்பித்துவிட்டது.
சீசன் 6ல் யார் தொகுப்பாளர் :
மேலும், இந்த சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா அல்லது சிம்புவே தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் கமல் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்தியன் 2 படமும் தற்போதைக்கு கிடப்பில் தான் இருக்கிறது. எனவே, இந்த சீசனில் கமல் தொகுத்து வழங்குவது சாத்தியம் தான். ஆனால், கமலை விட சிம்புவின் ஸ்டைல் பலருக்கும் பிடித்துபோய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும் பிக் பாஸ் அல்டிமேட்டில் கமலை போல் அல்லாமல் போட்டியாளர்களை பாரபட்சம் பார்க்காமல் வச்சி செய்தார் சிம்பு.