திருமணமான ஒரே மாதத்தில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள பிக் பாஸ் நடிகை.

0
7118
chaitra
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. தமிழில் ஒளிபரப்பாவது போலவே இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கன்னடத்தில் இது வரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கன்னட பிக் பாஸ் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் கன்னடா 7 நிகழ்ச்சியில் போட்டியாளரராக கலந்து கொண்டவர் நடிகை சைத்ரா. 27 வயதான இவர் கன்னடத்தில் கதை எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வளம் வந்தார்.

- Advertisement -

இதன் பின்னரே இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. இவர் கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர். இருவரும் கடந்த சில வருடங்கள் காதலித்து வந்ததாகவும், அதன் பின்னரே திருமணம் செய்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது. கணவரின் குடும்பத்தினர் தங்கள் திருமணத்தை ஏற்க மறுத்ததால், சைத்ரா ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தந்தை தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக அவர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளானார்.  வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு பாடத்தை அவர் கற்றுக் கொண்டார், மேலும் இதுபோன்ற அவசர முடிவை மீண்டும் எடுக்க மாட்டார். அவர் தனது எழுத்தில் அதிக கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். என் மகளின் சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement