பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் அன்ஷிதா வாங்கி இருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 86 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது. அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருவார்கள். இந்த வாரமே ரொம்ப எமோஷனலாக இருந்தது. அதிலும் சௌந்தர்யா, நடிகரும் முன்னாள் போட்டியாளருமான விஷ்ணுக்கு மேரேஜ் ப்ரோபோஸ் செய்ய, அதற்கு விஷ்ணு சம்மதம் சொன்னார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
அதன் பின் அருண் காதலியும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான அர்ச்சனா வீட்டுக்குள் வந்து இருந்தார். இருவரும் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக தங்கள் காதலை ஒத்து கொண்டார்கள். அதன் பின் கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று முதலில் ஜெஃப்ரி வெளியேறி இருந்தார்.
அதன் பின் அன்ஷிதா வெளியேறி இருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த விபரம் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
அன்ஷிதா சம்பளம்:
அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு ஒரு நாளைக்கு 25000 ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. அதன்படி இவர் மொத்தம் பிக் பாஸ் வீட்டில் 84 நாட்கள் இருந்திருந்தார். ஆக மொத்தம் இவருக்கு 21 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் பத்து போட்டியாளர்கள் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு இடையே தான் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற இருக்கிறது.
நாமினேஷன் பட்டியல்:
மேலும், நிகழ்ச்சியில் 13 வது வாரத்திற்கான நாமினேசன் நடைபெற்றது. இந்த முறை நேரடி நாமினேஷன் தான். அதில் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்லின், ராயன், அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது. முத்து, சௌந்தர்யா மட்டும் இந்த வாரம் நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் யார் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் வெற்றி பெறுகிறார்கள்? யார் இந்த வாரம் வெளியே போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.