பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராயன்-அன்ஷிதா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 79 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இந்த 12 வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, ஜெப்ரி, ஜாக்லின், மஞ்ஜரி, ராணவ், விஷால், பவித்ரா ஆகியோர் பெயர்கள் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீடாஸ்க் நடைபெறுகிறது. அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருகிறார்கள்.
பிரீஸ் டாஸ்க்:
அந்த வகையில் முதலில் தீபக்கின் மனைவியும் அவருடைய மகன் வந்திருக்கிறார்கள். இவரை அடுத்து மஞ்சரியின் மகன் மற்றும் அவருடைய அம்மா, தங்கை வந்திருக்கிறார்கள். ரொம்ப எமோஷனலாக மஞ்சரி தன்னுடைய மகனுடன் பேசி விளையாடி இருக்கிறார். அதன் பின் விஷால் வீட்டில் உள்ளவர்கள் வந்து இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிக் பாஸில் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்கள் வர இருக்கிறார்கள்.
#Rayan asking #Anshidha did she get pregnant inside #BiggBossTamil8 house!?
— Guruprasath (@imGuruprasath18) December 22, 2024
Wat a derogatory discussion!? Is that funny before the crores of people.#VJVishal panirntha mudichurpingala #BiggBoss8Tamil #BiggBossTamilSeason8 #BiggBossSeason8Tamil #BiggbossTamil… pic.twitter.com/yqlf3sDAOt
ராயன்-அன்ஷிதா வீடியோ:
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ராயன்-அன்ஷிதா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அன்ஷிதா, தனக்கு சாப்பிட ஏதாவது வேண்டுமென்று தன்னுடைய வயிற்றை காண்பித்து ராயனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், கிண்டலாக கர்ப்பமா? என்பது போல பேசி இருக்கிறார். உடனே அன்ஷிதா மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்கிறார். அதற்கு ராயன், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பின் தான் பேபி வந்ததா? என்று நக்கலாக கேட்டு சிரிக்கிறார். உடனே அன்ஷிதா, நாலு மாசம் ஆனந்தி என்று பேசி இருக்கிறார். இப்படி இவர்கள் வேடிக்கையாக பேசிருக்கும் வீடியோவை தான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.