நான் மொக்க மூஞ்சியா? அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கல – பிக் பாஸ் தர்ஷிகா உருக்கம்

0
229
- Advertisement -

விஷால் உடனான காதல் குறித்து பிக் பாஸ் தர்ஷிகா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 80 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி வருவது வழக்கம் தான். ஆரவ்- ஓவியா, கவின் லாஸ்லியாவை தொடர்ந்து இந்த எட்டாவது சீசனில் விஷால்-தர்ஷிகா காதல் ஜோடி உருவாகி இருந்தது. இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய சில நாட்களிலேயே தர்ஷிகா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார்.

தர்ஷிகா பேட்டி:

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அளித்த பேட்டியில் விஷாலுடனான காதல் குறித்து தர்ஷிகா கூறியிருப்பது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு எனக்கு நிறைய மனவலி இருக்கிறது, ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நான் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளராக இருந்திருந்தேன். என்னை விளையாட்டில் அடிக்க முடியாது என்று பாசத்தில் அடித்தார்கள். ஆனால், பிக் பாஸ் வீட்டில் என்னுடைய பாசம் வேஷம் கிடையாது. வெளிவந்த பிறகு தான் உள்ளே என்னை நம்ப வைத்து ஏமாற்றினார்கள் என்பது தெரிய வந்தது. ஒரு நடிகையாக நான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றேன். ஆனால், அங்கு என்னிடம் நடித்த சிறந்த நடிகர் என்றால் விஷால் தான் என்று சொல்வேன்.

-விளம்பரம்-

விஷால் சொன்ன வார்த்தை:

வீட்டுக்குள் இருக்கும்போது பவித்ரா, நிறைய முறை சொன்னார். ஆனால், நான் அவர் சொன்னதை கேட்காமல் இல்லை. நான் யோசித்து விளையாட முயற்சிக்கும்போது தான் வெளியே வந்துவிட்டேன். அந்த ஸ்கூல் டாஸ்க் இல்லை என்றால் கண்டிப்பாக நான் இன்னும் பிக் பாஸ் வீட்டில் இருந்திருப்பேன். காதல் கண்டன்டு எல்லாம் சொல்லி அனுப்பியது கிடையாது. அது தானாக நடந்தது. விஷால், என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னது எல்லாம் நான் வெளியில் வந்து தான் பார்த்தேன். அதே விஷால் நான் வீட்டுக்குள் இருக்கும்போது அழகாக இருக்கிறேன் என்று பலமுறை சொன்னார். என் முகத்திற்கு முன்னால் ஒன்று சொல்லி, எனக்கு பின்னால் நிறைய பேசி இருக்கிறார்கள்.

தர்ஷிகா சொன்னது:

அழகு என்பது முகத்தில் இல்லை மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்வது தான் அழகு. எனக்கு விஷால் மீது காதல் கொஞ்சம் இருந்தது உண்மை தான். விஷாலை பிடிக்கும். அதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும்போது, உங்க பாசத்தை மதிக்கிறேன் என்று அவர் சொன்னார். அப்படி ஏன் அவர் சொன்னார்? என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை. இதை அவர் உள்ளே சொல்லி இருக்கலாம். ஒருவர் நம்மை விரும்புவதை அறியும்போது தான் நாமும் அவரை விரும்ப பார்க்கிறோம். விஷால் என்னை விரும்பியதை என்னால் உணர முடிந்தது. அதனால் தான் நானும் அவரை விரும்பினேன். ஆனால், இது அதற்கான இடம் இல்லை என்று அவரிடமும் பேசி இருக்கிறேன். இருந்தும் எப்படியோ நடந்து விட்டது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement