சிறுவயதிலேயே பிரிந்த பெற்றோர்கள், காதலிக்கு நேர்ந்த கொடுமை – சத்யா வாழ்வில் இவ்வளவு சோகங்களா?

0
188
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்து வந்த பாதை டாஸ்கில் சத்யா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நான்கு வாரம் முடிந்து 32 நாள்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள். பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை.

- Advertisement -

பிக் பாஸ் 8:

அதன் பின் நிகழ்ச்சியை மேலும் சுவராசியமாக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து இருக்கிறார்கள். தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த வாரம் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று வருகிறது.

கடந்து வந்த பாதை டாஸ்க்:

இதில் ஒவ்வொரு போட்டியாருக்குமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்கள். அந்த வகையில் சத்யா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது. நிகழ்ச்சியில் சத்யா சொன்னது, நான் ரொம்ப வசதியான குடும்பத்தில் தான் பிறந்தவேன். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே என்னுடைய பெற்றோர்கள் பிரிந்து விட்டார்கள். பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். ஆனால், அவர் வயதானவர் என்பதால் என்னை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை.

-விளம்பரம்-

சத்யா சொன்னது:

இதனால் என்னை போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். அங்கு நான் ஒரு பெண்ணை காதலித்தேன். கல்லூரி சென்றும் எங்களுடைய காதல் தொடர்ந்தது. பின் எங்களின் காதல் அந்தப் பெண்ணின் வீட்டில் தெரிந்த உடன் அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். திடீரென ஒரு நாள் எனக்கு போன் கால் வந்தது. அப்போது அவள் இறந்துவிட்டார் என்று சொன்னார்கள். என்னுடைய முதல் காதலி என்னிடம் சொல்லி விட்டு தான் ஒரு இடத்திற்கு போனார். ஆனால், அங்கு சிலர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து ரயில்வே ட்ராக்கில் தூக்கிப் போட்டு இருந்தார்கள்.

கண்கலங்கி அழுத சத்யா:

அந்த விஷயம் தெரிந்து என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஐந்து முறை தற்கொலை முயற்சி செய்தேன். அது கோழைத்தனம் தான். இருந்தாலும் என்னால் அந்த வழியில் இருந்து வெளிவர முடியவில்லை. காரணம், என்னுடைய பெற்றோர்கள், காதலி என எல்லோருமே என்னை விட்டு சென்றதால் நான் ரொம்ப கவலையில் இருந்தேன். இதனால் நான் போதைக்கும் அடிமையாகி இருந்தேன். பின் சினிமா தான் எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்தது. அதற்குப்பின் இன்னொரு காதல் வந்தது. அவள் தான் என்னுடைய மனைவி ரம்யா என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்.

Advertisement