ஷிவானி, கேபியை தொடர்ந்து அன்பு கேங்கில் காரை வாங்கிய பிக் பாஸ் பிரபலம். விலை எவ்ளோ தெரியுமா ?

0
432
Aajeedh
- Advertisement -

சூப்பர் சிங்கர் ஆஜித் புது கார் வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி நிறுவனம். அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ஆண்டுகள் பல கடந்தாலும் கொஞ்சம் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு குறையாமல் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் வருடம் வருடம் வித்தியாசமான விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் புகுத்தி வருகிறார்கள். அதோடு இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

- Advertisement -

இதையும் பாருங்க : மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் விக்ரம் வெளியிட்ட முதல் வீடியோ. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள்.
இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இதில் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது.

-விளம்பரம்-

ஆஜித் பற்றிய தகவல்:

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆஜித். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதற்கு பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடனம் ஆடி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவருக்கு சீரியலிலும் படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் ஆஜித்துக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

பிக் பாஸ் ஆஜித்:

பின் சிறிய இடைவெளிக்கு பிறகு ஆஜித் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நன்றாகத்தான் விளையாடி வந்தார். இருந்தாலும், இவரால் கடைசிவரை வரமுடியவில்லை. அதற்கு பின்பு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது அஜித் புது கார் வாங்கி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

ஆஜித் வாங்கிய புது கார்:

சமீபகாலமாக விஜய் டிவி பிரபலங்கள் பலரும் சொகுசு கார்களை வாங்கி வருகிறார்கள். சரண்யா, சித்து-ஸ்ரேயா, ஹேமா, மைனா நந்தினி என பல பிரபலங்கள் சொகுசு கார்களை வாங்கி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்கள். இந்த வரிசையில் தற்போது ஆஜித் இணைந்திருக்கிறார். இவர் Skoda Slavia என்ற காரை வாங்கியிருக்கிறார். அந்த காரின் டாப் மாடல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், புது காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஆஜித் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement