மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர் விக்ரம் வெளியிட்ட முதல் வீடியோ. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
431
Vikram
- Advertisement -

சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்ரம் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் நுழைந்து தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
vikram

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து விக்ரமின் மேலாளர் சூர்ய நாரயணன் வெளியிட்ட பதிவில் ”’விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : அது கிடைக்கவில்லை என்பதால் என் கணவரை விட்டு வந்துவிட்டேன், அவருக்கு இப்போ வேற கல்யாணம் ஆகிடிச்சி. முதன் முறையாக விவகாரத்து குறித்த காரணத்தை சொன்ன இசைவாணி.

விக்ரம் மேலாளர் வெளியிட்ட அறிக்கை :

இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறோம்”

-விளம்பரம்-

துருவ் பதிவிட்ட உருக்கமான பதிவு :

அதே போல தன் தந்தையின் உடல் நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்ட விக்ரமின் மகன் துருவ் ‘அன்பான ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும்… என் தந்தைக்கு நெஞ்சில் லேசான அசௌகரியம் ஏற்பட்டதாலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியானவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகள் எங்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நேரத்தில் எனது தந்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சீயான் நலமுடன் இருக்கிறார். ஒரு நாளில் தந்தை வீடு திரும்பவார். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பதிவின் மூலம் வதந்திகள் எல்லாம் களையப்பட்டு தெளிவான புரிதல் உண்டாகும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

விக்ரம் வெளியிட்ட வீடியோ :

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்ரம் கடந்த 8 ஆம் தேதி சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய விக்ரம் முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ‘நீங்கள்காட்டிய அன்பும் அக்கறையும் பார்த்து நான் வியந்து போனேன். என் மீது நீங்கள் காட்டிய அன்பிற்கும் அக்கரைக்கும் மிக மிக நன்றி’ என்று கூறியுள்ளார்.

Advertisement