‘விக்ரமன் மாதிரி ஒரு அரசியல் பிரபலம் பிக் பாஸ் வீட்டுக்கு போனது’ – விக்ரமன் பற்றி ஆரி.

0
1449
vikraman
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் விக்ரமன் கலந்துகொண்டு இருக்கிறார்.இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

இவர் திருநெல்வேலியை சேர்ந்தவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். விக்ரமன் பல அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்து இருக்கிறார். அதில் பல பேட்டிகளில் பலரை மடக்கி மடக்கி கேள்வி கேட்டு இருக்கிறார். இதனால் இவர் பிக் பாஸில் போட்டியாளர்களை தெறிக்கவிடுவார் என்று பலர் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால், இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நமுத்து போன பட்டாசாக தான் இருந்து வருகின்றனர். அதிலும் இவரை அசீம் தான் அடிக்கடி அசிங்கப்படுத்திகொண்டே இருக்கிறார்.

- Advertisement -

ஆனால், அதற்கு இவர் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் மிகவும் பொறுமையாக தான் இருந்து வருகிறார். நேற்றய சண்டையில் கூட அசீம் இவரை வாடா போடா என்று தரக்குறைவாக பேசி போது இவர் பொறுமையாக இருந்ததை கண்டு ஆரி ஞாபகம் தான் வந்தது. எனவே, இவரை பலரும் ஆரி போல try செய்கிறார் என்றெல்லாம் கமன்ட் போடா துவங்கிவிட்டனர். இப்படி ஒரு நிலையில் விக்ரமன் குறித்து ஆரி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

vikraman

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ஆரி ‘விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் செல்லலாம் என்று முடிவெடுத்தது சரியான முடிவாக தான் நான் பார்க்கிறேன். ஏனென்றால் எல்லா துறைகளிலும் இருந்தும். இந்த தளத்தில் அணைத்து தரப்பு மக்களும் அடையாளப்படுத்தப்பட வேண்டும், பேசப்பட வேண்டும். விக்ரமன் போன்ற நிறைய பேர் இது போன்ற தளங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா தளத்தையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளும்போது அங்கு பேச வேண்டிய விஷயங்களை நீங்கள் சரியாக பேச முடியும்.

-விளம்பரம்-

உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது பெரிய விஷயம் தானே. இந்த நிகழ்ச்சியில் ஒரு நல்ல அரசியலை பேசலாம், நல்ல சமூகம் சார்ந்த விஷயங்களை எடுத்து வைக்கலாம். ஏனென்றால் நான் உள்ளே சென்றபோது அனைவரும் என்னை ஒரு நடிகராக மட்டும் தான் பார்த்தார்கள். ஆனால், அதையும் தாண்டி என்னுடைய சமூகம் சார்ந்த சிந்தனையும் நான் எப்படி தொலைநோக்கு பார்வையுடன் பார்க்கிறேன் என்று மக்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அந்த தளம் இருந்தது என்று கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரி இருந்த போது அவரது பொறுமையான குணம் மூலமே பலரின் மனதை சம்பாதித்தார். பாலாஜி அவரை பல முறை அசிங்கப்படுத்தியும் கன்னியுமுடனும் முதிர்ச்சியுடனும் நடந்து கொண்டார் ஆரி. தற்போது அதே போல தான் அசீம், பாலாஜியை போலவும் விக்ரமன், ஆரியை போலவும் நடந்துகொண்டு வருகிறார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement