கேவலமான பரிசை கொடுத்தாலும் அனிதாக்கு ஆரி என்ன பரிசு கொடுத்திருக்கார் பாருங்க. அதிலும் என்ன எழுதியுள்ளார் ? Unseen வீடியோ

0
66955
aari

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்து இருந்தனர். இதில் அனிதா சம்பத் ஆரிக்கு துணி துவைக்கும் பிரஷ் மற்றும் காது குடையும் 3 பட்ஸ்ஸை பரிசாக அனுப்பி இருந்தார். அனிதா அளித்த இந்த பரிசை பெற்றுக்கொண்ட ஆரி, இதன் மூலம் என்ன சொல்றாங்க, தினமும் துணியை துவச்சி போடுன்னு சொல்றாங்களா ? இல்ல கிளீன் பண்றதுக்கு உதாரணமா கொடுத்திருக்காங்களா தெரியல. கிப்ட் கொடுக்கற அளவுக்கும் நான் இங்க எதுவுமே செய்யலேயே,எல்லாரையும் துப்பாக்கி எடுத்து காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் சுட்டுனே இருக்கோமோ என்று நெனச்சேன். ஆனாலும் எனக்கு சந்தோச இருக்கு. ஏன்னா எனக்கு கிப்ட் வரவே வராதுன்னு நெனச்சேன் என்று கூறி இருந்தார் .

இதற்கான காரணத்தை நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் சொன்ன அனிதா துணியில் நிறைய காரைகள் இருந்தாலும் அதை நாம் பிரஷ் வைத்து தேய்க்கும் போது அது அனைத்தும் போய்விடும். அதேபோல கடந்த வாரம் உங்களை நான் காயப்படுத்தி இருந்தால் அந்த பிரச்னை மனதில் வைத்துக்கொள்ளாமல் இந்த ப்ரெஷ்ஷை போட்டு அந்த காயத்தை எல்லாம் மறந்து விடுங்கள். அதேபோல பட்ஸ் கொடுத்ததற்கு காரணம் பட்ஸ் வெளியில் வைத்து துடைத்தாள் ஒன்றும் ஆகாது அதுவே காதுக்குள் உள்ளே விட்டு துடைத்தாள் பாதிக்கும் அதேபோல நான் பண்ண எந்த விஷயத்தையும் ஆழமாக மனதில் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

இதையும் பாருங்க : வீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா ‘ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு.

- Advertisement -

நானும் அப்படி எடுத்துக்கொள்ள மாட்டேன். அப்படி இருந்தால் நம்முடைய உறவை அது பாதிக்கும். எப்படி நாம் பட்சை வைத்து காதை மேலோட்டமாக சுத்தம் செய்வோமோ அதே போல அந்த விஷயங்களை எல்லாம் மேலோட்டமாகதுடைத்து மறந்து விடுங்கள் என்று கூறியிருந்தார் கூறி இருந்தார் அனிதா. இப்படி ஒரு நிலையில் அனிதாவிற்கு ஆரி கிறிஸ்துமஸ் பரிசை அளித்துள்ள Unseen வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தனக்கு இப்படி ஒரு கேவலமான பரிசை அனுப்பிய அனிதாவிற்கு ஆரி மிகவும் அழகான பரிசை கொடுத்திருக்கிறார்.

நேற்றைய Unseen வீடியோவில் பேசிய ஆரி, நான் அனிதாவிற்கு இந்த பரிசு கொடுக்கிறேன். இதை நான் பாலாவிற்கு தான் கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இதை அனிதாவுக்கு கொடுக்கிறேன் என்றுகூறி ஒரு வாசனை திரவியத்தையும் ஒரு மணி மாலை ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார் ஆரி. அதுமட்டுமல்லாமல் ஒரு பேப்பரில் BB4 டைட்டில் வின்னர் அன்பு தங்கச்சி என்று எழுதி அதை ஒரு பெட்டியில் போட்டு போட்டு அந்தபேட்டிக்கு மேல் கன்னுகுட்டி என்று எழுதியிருக்கிறார் ஆரி. ஆனால், இதையெல்லாம் ஏன் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை என்பது தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement