வீட்டு விநாயகருக்கு ‘கிறிஸ்துமஸ் தாத்தா ‘ வேஷம். சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படத்தை நீக்கி பிரசன்னா போட்ட பதிவு.

0
5652
prasanna
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த பல நடிகர்களுக்கு பல ஆண்டுகள் கழித்துதான் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது அந்த வகையில் நடிகர் பிரசன்னாவும் ஒருவர் தமிழ் சினிமாவில் 2002ஆம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான பிரசன்னா, அதன் பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது அஞ்சாதே திரைப்படத்தின் மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் பிரசன்னாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. பா பாண்டி, துப்பறிவாளன் போன்ற படங்களில் பிரசன்னாவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது நடிகர் பிரசன்னா, விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகர் பிரசன்னா தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அழைக்கப்படடும் சினேகாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகளும் பிறந்தார்கள். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரசன்னா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதேபோல பண்டிகை காலங்களில் தனது வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் புகைப்படங்களை பிரசன்னா பதிவிடுவது வழக்கம்தான். ஆனால், நேற்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது வீட்டில் அலங்கரிக்கப்பட்ட விநாயகரின் புகைப்படத்தை நடிகர் பிரசன்னா பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

இதையும் பாருங்க : ஆரி, தான் இந்த வாரம் எலிமினேஷன். அதுக்கு தான் அவருக்கு 10 ஆயிரம் கொடுத்திருக்காங்க – யார் சொல்றது பாருங்க. Unseen வீடியோ.

- Advertisement -

கிறிஸ்துமஸ் தினம் என்றாலே வீட்டில் கிறிஸ்மஸ் மரங்கள் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்மஸ் பொம்மைகளை வைத்து கொண்டாடுவது போன்றவை வழக்கமான ஒன்றுதான். நேற்று கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தங்களது வீட்டில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்கள். அந்த வகையில் நடிகர் பிரசன்னாவும் தனது சமூக வலைத்தளத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் வீட்டில் இருந்த விநாயகருக்கு கிறிஸ்துமஸ் தாத்தாவை போல அலங்காரம் செய்து இருந்தார் பிரசன்னா.

இந்த புகைப்படத்தை பார்த்து பலர் பாராட்டினாலும் ஒரு சிலரோ இது இந்து கடவுளை ஆமோதிப்பது போல இருக்கிறது என்று கமெண்ட் செய்து வந்தார்கள். மேலும், பிரசன்னாவின் இந்த பதிவிற்கு அதிகப்படியான விமர்சனங்கள் வரவே அந்த புகைப்படத்தை உடனடியாக நடிகர் பிரசன்னா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கி இருந்தார். பின்னர் இது குறித்து ட்வீட் ஒன்றை செய்திருந்த நடிகர் பிரசன்னா. அதில் ”இந்துதர்மம் கடவுள் எதிலும் இருக்கிறார் என்றுதான் போதிக்கிறது. என்னுடைய எண்ணமும் அதுபோலத்தான். ஆனால், நான் செய்தது பலருக்கும் மூர்க்கத்தனமாக தெரிவதால் என்னுடைய எண்ணத்தை அவர்கள் மீது திணிக்க முடியாது. இதனால் நான் முன்பு பதிவிட்ட டீவீட்டை நீக்கி இருக்கிறேன். அனைத்திற்கும் மேலாக அணைத்து கடவுளும் கடவுள் தான்’

-விளம்பரம்-
Advertisement